காலிசெய்யும் உத்தரவைத் தடுப்பதில் கம்போங் சுபாடாக் குடியிருப்பாளர்கள் தோல்வி

sentulசெந்தூல்,  கம்போங்  சுபாடாக்  தாம்பாஹான்  குடியிருப்பாளர்கள்  தொடுத்த  வழக்கைத்  தோற்கடிப்பதில்   கோலாலும்பூர்  மாநராட்சி  மன்றமும்(டிபிகேஎல்),  மேயரும்,  மேம்பாட்டாளரும்  வெற்றி  பெற்றனர்.

நில, சுரங்கத்  துறை,  டிபிகேஎல், மேம்பாட்டு  நிறுவனமான  செந்தூல்  முர்னி  சென்.பெர்ஹாட்  ஆகிய தரப்பினர்  தாக்கல்  செய்த  மனுவை  ஏற்று  நீதிபதி  நிக்  ஹஸ்மாட் நிக்  முகம்மட்,  குடியிருப்பாளர்களின்  வழக்கைத்  தள்ளுபடி  செய்தார்.

குடியிருப்பாளர்கள்  சட்டவிரோதமாக அந்நிலத்தில் தங்கி  இருக்கிறார்கள்  என்பது  அவர்களின்  வாதம். குடியிருப்பாளர்களோ,  தாங்களே  அந்நிலத்தில்  முதன்முதலில்  குடியேறியவர்கள்  எனவே  அது  தங்களுக்குரிய  நிலம்  என்கிறார்கள்.

தீரப்பளித்த  நீதிபதி  நிக் ஹஸ்மாட்,  மேல்முறையீடு  செய்ய  அவகாசம்  அளித்து தீர்ப்பை  14  நாள்களுக்கு  நிறுத்திவைத்தார்.

இதனிடையே ,  தீர்ப்பு  நிறுத்திவைக்கப்பட்டிருந்தாலும், அங்குள்ள  வீடுகள்  உடைபடுவதைத்  தவிர்க்க  முடியாதுபோல்  தெரிகிறது.  குடியிருப்பாளர்கள்  20  ஆண்டுகளாக  சட்டவிரோதமாக  அங்கு  தங்கி  இருக்கிறார்கள்  என்பதால்  அவர்களின்  வீடுகளை  உடைப்பதில் மேயர்  அஹ்மட்  பீசல்  தாலிப்  உறுதியாக  இருக்கிறார்  என  அறிவிக்கப்பட்டுள்ளது.