‘பாலியல் வழக்கில்’ அமைச்சர்கள் முதுகெலும்பு உள்ளவர்களாகக் காண்பித்துக் கொள்ள வேண்டும்

kadirமலேசிய  தூதரக  அதிகாரி  ஒருவர்,  நியு சிலாந்தில்  ஒரு பெண்ணிடம்  தகாதமுறையில்  நடந்துகொண்டதாகக்  குற்றம்சாட்டப்பட்டிருக்கும்  வழக்கில்  வெளியுறவு  அமைச்சர்  அனிபா அமானும்  தற்காப்பு  அமைச்சர்  ஹிஷாமுடின்  உசேனும்  உறுதியுடன்  நடந்துகொள்ள  வேண்டும்.

மலேசியாவும்  நியு  சிலாந்தும்  நல்லுறவு  கொண்ட  நாடுகள்  என்பதை வலியுறுத்திய  மூத்த  செய்தியாளர்  ஏ.காடிர்  ஜாசின்,  நாட்டின்  பெயரைக்  களங்கப்படுத்தியவர்கள்  கண்டிக்கத்தக்கவர்களே  என்றார்.

நியு  சிலாந்தில்  சுமத்தப்பட்ட  குற்றச்சாட்டு  உண்மையாக  இருப்பின்  அது  மிகப்  பெரிய  இழுக்காகும்  என்றாரவர்.

“நாட்டுக்கு  ஏற்பட்டுள்ள  களங்கத்தைத்  துடைக்க  வெளியுறவு  அமைச்சரும்  தற்காப்பு  அமைச்சரும்  கடுமையான  நடவடிக்கை  எடுத்துக்க்கொள்ள  வேண்டும்”, என்று  காடிர்  கேட்டுக்கொண்டார்.