பெட்ரோனாஸ் விளக்கக் கூட்டத்தில் சரவாக் எதிரணியினருக்கு இடமில்லை

petroதிங்கள்கிழமை  நடந்த  பெட்ரோனாஸ்  விளக்கமளிப்புக்  கூட்டத்துக்குத்  தாங்கள்   அழைக்கப்படாததை  எண்ணி  சரவாக்  சட்டமன்ற  எதிரணியினர்  ஆத்திரம்  அடைந்துள்ளனர்.

பெட்ரோனாசின்  நடவடிக்கைகள்,  வருமானம்  பற்றி  விளக்கப்பட்ட அக்கூட்டத்தில்  முதலைமைச்சர்  அடினான்  சாதேமும்  மாநில  அமைச்சர்களும்  கலந்துகொண்டனர்.

எண்ணெய்  உரிமப்பணத்தை  அதிகரிக்க வேண்டும்  என்று கேட்டுக்கொள்ளும்  தீர்மானத்தை  முதல்முதலில்  கொண்டுவர  முனைந்தவர்கள்  எதிரணியனர்தான்.  ஆனால்,  அது அப்படியே  “கடத்திச்செல்லப்பட்டு”  அரசாங்க  உறுப்பினர்  ஒருவர்  அதைச் சட்டமன்றத்தில்  தாக்கல்  செய்தார்.

ஆனாலும், 15  எதிரணி  உறுப்பினரும்  அதற்கு  ஆதரவு  அளித்தனர்.

அப்படி  இருக்க  பெட்ரோனாஸ்  விளக்கக்  கூட்டத்தில்  தங்களைச்  சேர்க்காதது  குறித்து  சரவாக்   பிகேஆர்  உதவித்  தலைவர்  ஸீ  சீ  ஹாவ்  வருத்தம்  தெரிவித்தார்.

எல்லாருக்குமான  முதலமைச்சர்  என்பதைக்  காண்பித்துக்கொள்ள  அடினானுக்கு  நல்ல  வாய்ப்பு கிடைத்தது.  அதை  அவர்  தவற  விட்டு  விட்டார்  என்றாரவர்.