‘பாலியல் தாக்குதல்’அரசதந்திரியின் பணிகளில் ஒன்றல்லவே’

ngoபாலியல்  குற்றம்  புரிந்ததாகவும் திருடியதாகவும்  குற்றம்சாட்டப்பட்டுள்ள  தூதரக  அதிகாரி முகம்மட்  ரிசால்மன் இஸ்மாயிலுக்கு  அரசதந்திர  சலுகைகளை  நீட்டிப்பதை  சுதந்திரத்துக்கான  வழக்குரைஞர்கள்  அமைப்பு  கண்டித்துள்ளது.

“அரசதந்திரிகளுக்கான  சலுகை  என்பது வெளிநாடுகளில்  தொந்திரவு  இல்லாமல்  அரசதந்திர  வேலைகளைச்  செய்வதற்காக   வழங்கப்படுவது.  அது,  குற்றச்செயல்கள்  புரிவதற்கான  ‘லைசென்ஸ்’  அல்ல”, என்று அந்த  என்ஜிஓ-வின்  செயல்முறை இயக்குனர்  எரிக்  பால்சன்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

ரிசால்மனை  இராணுவ  நீதிமன்றத்தில்  விசாரிப்பது  போதாது  என்றாரவர்.

“இது  ஒழுங்குவிதிகளை  மீறிய  ஒரு  விவகாரமல்ல. ஒரு  பெண்ணுக்கு  எதிராகக் கடும்  குற்றச்செயலில்  ஈடுபட்டார்  என்பதுதான்  குற்றச்சாட்டு.

“மேலும், சுமத்தப்பட்டிருக்கும்  குற்றச்செயல்கள்  நியு  சிலாந்தில்  செய்யப்பட்டவை  என்பதால்  விசாரணையை  அங்கு  வைத்துக்கொள்வதுதான்  பொருத்தமாக  இருக்கும்”, என்றாரவர்.