குறைகூறிய முன்னாள் சிஜே-யை என்யுசிசி சாடியது

nuccதேசிய  ஒற்றுமை  ஆலோசனை  மன்றம்(என்யுசிசி), அதைக்  குறைகூறிய  முன்னாள்  தலைமை  நீதிபதி  அப்துல்  ஹமிட்  முகமட்டைச்  சாடியுள்ளது. அவர்   மன்றத்தின்  உறுப்பினர்களைப்  பற்றியோ  அது  அமைக்கப்பட்டதன்  நோக்கம்  பற்றியோ  புரிந்துகொள்ளாமல்  பேசி  இருக்கிறார்  என்றது  கூறியது.
“எங்கள்    சட்டவரைவுகள்  குறித்து  ஆதாரமின்றி  அவர்  கருத்துரைத்திருப்பது  ஏமாற்றமளிக்கிறது. அது  என்யுசிசி  பற்றி  அவர்  தப்பான  எண்ணம்  கொண்டிருப்பதையும்  காண்பிக்கிறது”, என  அம்மன்றம்  ஒரு கூட்டறிக்கையில்  கூறியது.

பாஸ் எம்பி  முஜாஹிட்  ராவா,  அம்னோவின்  சைபுடின்  அப்துல்லா, வழக்குரைஞர்  மன்றத்தின்  முன்னாள்  தலைவர்  லிம்  சீ  வீ  ஆகியோர்  அவ்வறிக்கையை  விடுத்திருந்தனர்.

அப்துல்  ஹமிட்,  என்யுசிசி  தலைவர்  பதவியை  ஏற்க  மறுத்தது  ஏன்  என்று   நேற்று  அளித்திருந்த  விளக்கத்துக்கு  எதிர்வினையாக  அவர்கள்  இவ்வறிக்கையை  விடுத்துள்ளனர்.