சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமின் ஆலோசகர்கள் இருவர்மீது பிகேஆர் இன்று ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டது.
அவரின் அரசியல் செயலாளர் முஸ்தபா முகம்மட் தாலிப், கோலா சிலாங்கூர் பிகேஆர் தொகுதி தேர்தலில் போட்டியிட்ட ஒருவரை மிரட்டியதற்காக ஓராண்டுக் காலம் இடைநீக்கம் செய்யப்பட்டார். அதே வேளை அவரின் போர்ட் கிள்ளான் தொகுதி ஒருங்கிணைப்பாளர் பயிகா உசேனுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது.
நேற்று அவர் வெளியிட்ட ஒரு அறிக்கைக்காக பயிகாவுக்கு அக்கடிதம் அனுப்பப்பட்டது.
காலிட் பதவி விலக வேண்டும் என்று பிகேஆரில் எழுந்துள்ள கோரிக்கைகளுக்கு எதிராக பயிகா, அவரைத் தற்காத்து அறிக்கை விடுத்திருந்தார்.
நீதிக் கட்சியின் 3 மேல்மட்ட தலைவர்கள் உட்கார்ந்து பேசும் பொழுது, நான் இறந்தால் மட்டுமே (‘over my dead body’) துணைத்தலைவர் எம் பதவிக்கு வர முடியும் இல்லையேல் வேண்டுமானால் நீரே இப்பதவியை எடுத்துக் கொள்ளும் என்று பேசிவிட்டு, இன்று தே.மு. களவாடிப் பையன்களின் கிளி ஜோசியத்திர்க்கு ஏற்றவாறு பாடும் இந்த காலித் கிளி இன்னும் இப்பதவியில் இருக்கத்தான் வேண்டுமா?. சிலாங்கூர் மக்களே உரிமை உங்கள் கையில்.
குடுமிபுடி சண்டையும் கையில் ஆப்பு அடித்துகாட்டும் செய்கையும் பி கே ஆர் கட்சியை பிடித்து ஆட்டுகிறது .இவர்கள் கட்சியை நடத்துகிறார்களா இல்லை சாக்கடையை நடத்துகிறார்களா? இவர்கள் பிரச்சனையே தீர்க்க முடியாதவர்கள் எப்படி மக்கள் பிரச்சனையை தீர்க்க போகிறார்கள் .சொந்த கட்சிக்காரன் மண்டையை பிளந்து தேர்தல் நடத்தும் டப்பாங் குத்து ஆட்டம் ,எவன் காலைவாரி விட்டு பதவியை பிடிப்பது என்பதிலே பி கே ஆர் கட்சி தலைவர்கள் தற்பொழுது தீவிரம் காட்ட துவங்கி விட்டனர் .காப்பார் தொகுதியில் சிறப்பான சேவையை வழங்கிய மாணிக்கவசாகத்தை காபாப்ரில் இருந்து கழுட்டி விட்ட கட்சியின் சுயநல போக்கின்போதே தெரிந்தது பி கே ஆர் கட்சி எதை நோக்கி சென்று கொண்டிருகிறது என்று அன்று ஏன் மாணிக்கவசாகத்தை காப்பாரில் ஒதுக்கிநீர்கள் என்று எவனும் குரல் கொடுக்க வில்லை ?எல்லாம் சுயநலம் போக்கு .வாழ்த்துக்கள் மாணிக்கவாசகம் அவர்களே ,அடுத்த பொதுதேர்தலில் மீண்டும் நீங்கள் காப்பர் தொகுதிக்கு வர வேண்டும் .தற்பொழுது உள்ள நாடளமன்ற உறுப்பினர் செய்கிறாரா என்பது சந்தேகமே .
பொது தேர்தலில் பாஸ் ஜெயித்தும் அடிலானை சேர்ந்த காலிட்டே மீண்டும் எம்.பி,யாக வரவேண்டும் என்ற மக்கள் கோரிக்கையை கண்டு அன்வர் அச்சம் கொண்டது மாதிரி தோனுகிறது.காஜாங் இடை தேர்தல்,நீர் பற்றாக்குறை மற்றும்2.எப்படியாவது காலிட்டை விரட்டவேண்டும்.இந்த இடத்தில் அன்வர் பழைய பி.என் யுக்தியை பயன்படுத்திவிட்டார்.வழி தெரியாது மக்கள் லங்ஙாட்2 கையெழுத்து நடந்தது.மாணிக்காவை பயன்படுத்தி காலிட் வீழ்த்தப்பட்டார்.அதை அடுத்து பதவி விலக வற்புறுத்தல்,இதிலிருந்து என்ன தெரிகிறது ” சூழ்ச்சி” நாடகம் அரங்கேறி நடந்து முடிந்துவிட்டது என்பதே.அடுத்து யார் வருவாரோ அடிலான் நிலைக்குமா பாக்காத்தானில்,பாஸ் காரர் தேர்ந்தெடுக்கப்பட்டால் சீனர்கள் நிலை ?????.வாழ்க நாராயண நாமம்.