பறிமுதல் செய்யப்பட்ட பைபிள்களின் நிலை என்ன?

bibleபறிமுதல்  செய்யப்பட்ட  ஈபான். மலாய்  மொழி  பைபிள்கள் நிலை  பற்றி  இதுவரை  எதுவும்  தெரியவில்லை.  சிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிமை  அணுகி  வினவியதற்கு  “நடந்து  கொண்டிருக்கிறது”  என்று  மட்டும்  கூறி  ஆவலை  அதிகப்படுத்தினாரே  தவிர  சந்தேகத்தைத்  தெளிவுபடுத்தவில்லை.

மாநில  ஆட்சிக்குழுக்  கூட்டத்துக்குப்  பின்  செய்தியாளர்களைச்  சந்தித்த  காலிட், “ஒரு  தீர்மானத்துக்கு  வந்திருக்கிறோம். அதை அமல்படுத்திக்கொண்டும்  இருக்கிறோம். இதைப்  பற்றி  மேலும்  விவரிக்க  இயலாது. பிறகு  தெரிவிப்பேன்”,  என்றார்.

ஜனவரி  மாதம்  மலேசிய  பைபிள்  கழகத்திடமிருந்து  அந்த  பைபிள்கள்  பறிமுதல்  செய்யப்பட்டன.