பிச்சை எடுப்பதையும் இடுவதையும் குற்றமாக்குவது இஸ்லாத்துக்கு ஏற்புடையதல்ல

almsபிச்சை எடுப்பதும்  இடுவதும்  குற்றம்  என  அறிவிக்கப்படும்  எனக்  கூட்டரசு  பிரதேச அமைச்சர்  தெங்கு  அட்னான்  மன்சூர்  கூறியிருப்பதை யாரும்  வரவேற்பதாகத்  தெரியவில்லை.

கூட்டரசு  பிரதேச  பாஸ்  இளைஞர்  பகுதித்  துணைத்  தலைவர்  முகம்மட்  யூசுப்,  அவ்வாறு  செய்வது  இஸ்லாத்துக்கு  ஏற்புடையதல்ல  என்றார். இஸ்லாம் ஈகையை  ஊக்குவிக்கிறது  என்றவர்  கூறினார்.

அரசாங்கத்தால்  நகர்புற  வறுமைக்குத்  தீர்வு  காண முடியவில்லை,  பிச்சை  எடுக்கும்  கும்பல்களைக்  கட்டுப்படுத்த  முடியவில்லை.  அதன் காரணமாகவே  கோலாலும்பூரில்  பிச்சை  எடுத்தல்  பெருகியுள்ளது  என்றவர்  குறிப்பிட்டார்.

பிச்சை எடுப்பதையும்  இடுவதையும்  குற்றமாக்குவதற்குப்  பதில், அமைச்சு  வீடற்றோருக்கு  வீடுகள்  கொடுக்கவும்  பிச்சை  எடுப்போருக்கு  நல்ல  வாழ்க்கையை  ஏற்படுத்திக்  கொடுக்கவும்  முனைய  வேண்டும்  என்றவர்  சொன்னார்.