எதிரணி தலைவர் அன்வார் இப்ராகிம் நாட்டின் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கத்துடன் நியு சிலாந்தில் மலேசிய தூதரக அதிகாரி சம்பந்தப்பட்ட விவகாரம் மூடிமறைக்கப்பட்டதாகக் கூறி இருக்கிறார் என அரசாங்கம் சாடியுள்ளது.
“நியு சிலாந்து ஊடகத்துக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் அவ்விவகாரம் மூடிமறைக்கப்பட்டதாக அன்வார் இப்ராகிம் குறிபிட்டிருப்பது முற்றிலும் பொய்யாகும்.
“இது, அரசியல் ஆதாயத்துக்காக மலேசியாவின் நற்பெயரைக் கெடுக்கும் எதிரணித் தலைவரின் முயற்சிகளில் மற்றுமொன்று”, என அரசாங்க அறிக்கை ஒன்று குறிப்பிட்டது.
நம்ப நாட்டில் சம்பவம் நடந்து இருந்தால், பெண்ணே வழிய வந்தால் என்றும், சம்பந்தம் இல்லாத அப்பாவியை கைது செய்து சிறையில் அடித்தே கொன்றுவிடும் காவல் துறை, நிமோனியா காய்ச்சல் என்று
அரசு மருத்துவர் நீதியை கொலை செய்வர் …..!
அதெப்படி இந்த இவ்விவகாரத்தில் அரசாங்கம் மூடி மறைக்கிறது என்று கூறலாம். அரசாங்கம் உலகளவில் எல்லா நாடுகளையும் முட்டாளாக்கிய “MH 370” கொள்கையை பின்பற்ற முயற்சி செய்திருக்கிறது. அதில் என்ன தவறு ???
மூடிமறைக்கத்தான் பார்த்தோம். ஆனால் நியூசி ஊடகங்கள் விடவில்லையே.. குப்புற விழுந்தும் மீசையில் மண் ஓட்டலை என்கிறோமே, இதைக் கூடவா உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை, மக்களே…?
இவ்விவகாரம் மூடிமறைக்கப்பட்டதாக அன்வார் இப்ராகிம் குறிபிட்டிருப்பது முற்றிலும் பொய்யாகும் என்றால் எல்லாத்தையும் திறந்து காட்டுங்கள் பார்ப்போம்…