பிரதமர்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள மா சியு கியோங் தேசிய இந்து அறவாரியத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது இந்துக்களை அவமதிக்கும் செயல் என பினாங்கு இந்து அறவாரியத் தலைவர் பி.இராமசாமி கூறுகிறார்.
“இந்துக்களுக்கு இப்படியோர் இழிவா? அப்பொறுப்பைக் கவனித்துக்கொள்ள இந்தியர்களில் தகுதியானவர்கள் எவருமில்லையா?”, என பினாங்கின் 2-வது துணை முதலமைச்சருமான அவர் வினவினார்.
“அப்பொறுப்பை ஏன் மஇகா தலைவர்களிடம் ஒப்படைக்கவில்லை? இச்செயலின்வழி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இந்நாட்டில் உள்ள இந்தியர்களை அவமதித்து விட்டார். வெட்கக்கேடு!”, என இராமசாமி கூறினார்.
இதை அறிந்த பின்னரும் மாமாமாஇகவினர் இன்னும் உயிரோடு இருக்கின்றனரே…அந்தோ பரிதாபம்
இதில் என்ன வெக்ககேடு இருக்கு நம்மவர் செய்ய வில்லை பல பிரசனைகள் தினமும் நாம் நாளிதழில் படித்து தெரிந்து கொள்கிறோம்.
சரி வெக்ககேடு வைத்து கொள்வோம் இப்பொழுது இந்த பிரச்சனை பற்றி பிரதமர் அவர் இடத்தில நமது இந்திய தலைவர்கள் ஆணித்தனமாக பேச முடியுமா ?பேசி அந்த துறையை இந்தியர் கட்சி தலைவர்களிடம் ஒப்படைக்க முடியுமா ?
பழனி நீர் என்ன செய்கிறாய் ?
மலேசிய தேசிய முஸ்லிம் அறவாரியத் தலைவராக, மஇகாவின் தலைவர் ” பழனிவேல் அப்துல்லாவை ” நியமனம் செய்து விட்டால்
பிரச்சினை தீர்ந்தது. இதுக்கு பொய் ரொம்ப அலட்டிகிறீங்க !!!!
பினாங்குல நீங்க என்னா கிழிச்சீங்க, பினாங்கு இந்து அறவாரியத்தின் பாதுகாப்பில் இருந்து காணாமல் போன தங்கத்திற்கு இன்னும் பதில் இல்லை, நீங்க எல்லாம் அறிக்கை விடுரீங்க, அதுதான் இப்ப கேவலம்.
இப்பயே இப்படி இன்னும் வர போற காலத்தில எப்படியோ.நம்மவர்களுக்கு என்ன துறை கிடைக்குமோ ???
மலேசியன் சொல்லுவதை நான் ஆதரிக்கிறேன். இந்தியர்களில் தகுதியானவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வாயைத் திறக்கமாட்டார்கள் என்பது நமது தினசரி அனுபவம். அதற்குப் பதிலாக ஒரு சீனர் இருப்பதால் தவறில்லை. அவராவது கொஞ்சமாவது பேசுவார். மேலும் யார் கண்டார். அவர் இந்துவாகவும் இருக்கலாம்.
பழனி நீர் கழிக்க போய்விட்டார் ……!
ஐயா! இராமசாமி அவர்களே! எப்பப் பார்த்தாலும், இந்தியன் சரியில்லை, தமிழன் சரியில்லை, ம.இ.கா. சரியில்லை என சதா குடைகிறீர்கள்.நல்லதுதான். இப்போது சீனன் வந்துள்ளான். என்னதான் செய்கிறீர்கள் பார்ப்போமே!
மானமாவது ! வெட்கமாவது சூடு சொரணை கெட்ட ஜென்மங்கள் !!!!!!
இதை PPP கெவியழ் அவர்களிடம் கொடுத்து இருக்கலாம் . பாவம MIC . இதுதான் unmo வின் பவர் .
தம்பி அனனமியோ அண்ணன் பழனி ,,,,,,ஒரு பெருந்தலைவரிடம் பதவி பிரமாணம் எடுக்கும் பொழுது எதோ ஒரு லேகியம் உண்டாராம் அப்போது செயல் இழந்த நா இன்றும் இனி என்றும் ??????????
என்று தெரிந்து கொள்ள அதன் காதை பிடித்து தூக்குவார்கள் ,அப்பது அந்த குட்டி தன்னை தர்காத்து கொள்ள கத்தும் ,,,,,,,,,,அதுவே அமைதியாக இருந்தால் ,,,,,,அது சுரணை அற்றது ,,
ம இ க தான் மானம் இழந்த கட்சி ஆயிற்றே
சீன இந்து! தப்பு இல்லையே! பௌத்த மதம் சீனாவுக்கு உயிர்கொடுத்தது ஓர் இந்தியர்தானே! யார் என்பது முக்கியம் இல்லை என்ன செய்கிறார் என்பதுதான் முக்கியம்!
தெலுக் இந்தானில் DAP சுமார் 15 ஆண்டுகள் நாடாளுமன்றம் வைத்து இருந்தது. இந்து கோவில்களுக்கு ஒரு பலகை கூட கட்டியதில்லை/DAP அதாவது உங்கள் கட்சி மனோகரன் காலத்தில் தெலுக் இந்தான் இந்து சபா நிலத்தில் மண்டபம் கட்ட பல முயற்சிகள் எடுத்தார்கள் எல்லாம் சாம்பல் கதையானது. DAP நாடாளுமன்றம் ஒரு தமிழ்ப பள்ளிகளுக்கு ஒரு ஆணி கூட அடிக்க முடியல?
மஹ அவர்கள் இப்போது மதிய அரசை பிரதநிதித்து அதுவும் பிரதமர் துறை மந்த்ரி. அங்கு இருந்த வேதமூர்த்தியை தொடர்ந்து பத்திரிகை வேட்டு வெச்சி கிளப்பியதில் உனக்கு முதல் பங்கு.ஒரு தமிழன் இருந்தான் அவனுக்கு எட்டப்பன் வேலை செய்தாய் !
நாட்டில் இந்து சங்கம் . இந்து சார்ந்த சபைகள் எல்லாம் உங்கள் சங்கம் சேர்த்து எல்லாம் கோச டப்பா என்பது பிரதமருக்கு தெரியும் போல. ஒரு சீனரை வைத்தால் ஒரு வேலை உங்களவனுக்கு புத்தி வரும் என்பதால் வைத்துள்ளார் . அவர் மஹ சூடம் போட வேண்டாம் சூடம் வாங்கி தர உதவலாம்.
நாட்டில் இந்து மத மகா மகா மாரியம்மன் கோவில் மேல் சவால் விட்டாய் அதில் நாமம் ? இதுவரை இந்து சமய இந்தியன் ஒருத்தனும் சரி இல்லை என்பதுதானே உங்கள் கூற்று? மாத்தி யோசிப்போம்? மஹ வை விட்டுதான் பார்ப்போம். அவரும் ஒரு சீனர் புத்தர் சமய சைவ இந்து “ஓரி”தான். காளியும் கும்பிடுவார்.குங்குமம் வைத்துக்கொள்வர். கை எடுத்து கும்பிடுவார். மாடு சாப்பிடுவதில்லை.
அமைச்சர்கள் அவரவர் தமது துறையில் பாண்டித்துவம் பெற்றுதான் பொறுப்பு தர வேண்டுமானால் உங்களையும் சேர்த்து ஒருத்தனும் தகுதி இல்லாமல் போய் விடுவார்கள். உங்களுக்கே தெரியும் பினாங்கில் எதனை சிக்கல் தீர்க்கப்பட முடியாமல் “பெஹ் ” “பெஹ் ! ?”
தமிழ் இலக்கியத்தில் படித்த ஞாபகம் …இந்து மதத்திற்கு 4 வேதங்கள் உண்டாம். நீங்கள் எந்த வேதம்? எதில் சொன்னார்கள் இந்து மதத்திற்கு இந்துதான் பருப்பு விற்க வேண்டும் என்று?
தமிழ் பித்தன் அரைவேக்காடு என்று அவர் எழுதியதிலே காண்பித்து
விட்டார்.
ம.இ .க,விடம் கொடுத்தால் தப்பு சொல்றீங்க திருடன் சொல்றீங்க,ம.இ.க,வே சும்மா இருக்கு,எனக்கு இதில் முழு திருப்தி வாழ்க கேராகான்.
இந்தியர்களை பிரித்துஆல்வதில் மகா சாணக்கியர் நமது பிரதமர் !
annoyed எலி புத்தி Anonymous எதாச்சும் எழுதி சொல்லுடா பெ பு
இதை அன்றே வேதமூர்த்தியிடம் கொடுத்திருக்கலாமே? பாவம் வேதமூர்த்தி ! யார்தான் அவரை நம்பினார்கள் ? காரணம் தன் சொந்த அண்ணன் (உதய குமாருக்கு) கூட உண்மையை இல்லை ! அப்புறம் எப்படி UMNO காரர்கள் நம்புவார்கள் ? எல்லாம் கபட நாடகம்! நாளைக்கு ஏதாவது தப்பு நடந்து விட்டால், ஐயகோ மஹ வுக்கு சரியாக தெரியாது என்று சப்ப கட்டு கட்டலாமே ! இதில் கெரக்கான் என்ன ? ம இ க என்ன ? ஆகா மொத்தத்தில் இங்கே எல்லோரும் அரசியல் மட்டும் செய்ய பார்கிறார்கள் !! இதை புரிந்து கொள்ள ஒரு அசாதரியம் வேண்டும் !!
தமிழ் பித்தன் போல இன்னும் நிறைய பைதியங்கள் நாட்டில் அலைந்து கொண்டுரின்கின்றன. இந்தியனுக்கு உதவி செய்யாவிட்டலாம் பரவாஇல்லை வாழ விடு….
ம இ கா வின் திறமையில் பிரதமர் நம்பிக்கையில்லாமல் இம்முடிவை எடுத்திருக்கலாம். எதைத்தான் ம இ கா தலைவர்கள் இந்தியர்களின் பிரச்சனைகளை முழுமையாகத் தீர்த்திருக்கின்றனர் .அதிகமான பிரச்சனைகள் ஏற்பட்டு அடிதடியில்தான் முடியும். இந்தியர்களின் பேச்சை இந்தியர்கள் கேட்பதில்லை . பிரதமரிடம் பேசுவதற்கே பயப்படும் இவர்கள் இதுவரை சாதித்தது என்ன? இவ்விசயத்தில் பிரதமரிடம் பேசவார்களா?
மா இந்து அறவாரிய தலைவரா? ஐயகோ,வெட்கக்கேடு…..இனிமேல் சூடம் சாம்பிராணி திருநீர் எல்லாம் மொத்த வியாபாரி சினன் தான்….ஹிந்து விசயங்களில் என்ன என்ன அட்டுழியம் பண்ண போறாரோ ??? இதே இஸ்லாமிய விவரங்களை கவனிக்க ஒரு சினரை நியமிபரற பிரதமர் ???
பழனி பிடுங்கிகொண்டிருக்கிறான் அதை மற்ற MIc- காரன்கள் கத்தை கட்டிகொடிருக்கின்றான்கள்.
முஸ்லிம்களுக்கான ஒரு நிர்வாகத்தை சீனரோ பௌத்தர்களுக்கான நிர்வாகத்தை ஓர் இந்துவோ இந்நாட்டில் தலைமையேற்று நடத்த முடியுமா? ஒருகாலும் முடியாது. ஆனால், ஏமாந்த சோனகிரிகள் இந்தியர்களே! ம.இ.காவுக்கு இதைவிட அவமதிப்பு வேறு என்னவாக இருக்க முடியும். சத்து மலேசியா என்றால் இப்படியா ஒரு சமய விவகாரத்தில் இன்னொருவன் மூக்கை நுழைப்பது!!!!!!!!!
அய்யா தயவு செய்து யாரையும் குறை சொல்ல வேண்டாம்
anonymous குறை உள்ள இடத்தில் குறை சொல்லாமல் நிறைவா சொல்ல முடியும்? தயவு செய்து நம்முடைய கையாலாகாத்தனத்தை பறைசாற்றவேண்டாம்.
ஐயா ராமசாமி அவர்களே! தயைக்கூர்ந்து தற்சமய பிரச்சனையைப் பற்றி கருத்துக் கூறுங்கள். அதை விடுத்து வேறொரு விசயத்தை உள்ளே திணிப்பது , உங்களின் காழ்ப்புணர்ச்சியை மட்டுமே பிரதிபலிக்கிறது. ஒட்டு மொத்த கருத்து, ஏன் இந்து மதத்தைச் சார்ந்தவர் தேர்வு செய்யப்படவில்லை என்பதாக இருக்கையில், நீர் மட்டும் திசை திரும்புவது வேடிக்கையாக உள்ளது.
பல விஷயத்தில் நாம் பின் தங்குகிறோம் ,,,,,,,எதிர்காலத்தை பற்றி எவனும் சிந்திப்பது இல்லை ,,,,,,நம் சமுதாய தலைவர்கள் ரொம்ப நல்லவர்கள் ,,எதையும் விட்டுகொடுதுவிடுவார்கள்
தமிழன் [இந்து] மதிக்கப்பட வேண்டும் எனில் தமிழர்கள் ஒன்றுபடவேண்டும், பொருளாதாரத்தில் உயர வேண்டும். இல்லையேல் மேலும் மேலும் அவமதிப்புக்கு உள்ளாவோம்