ஆங்கில நாளிதழ்மீது பாய்கிறார் சைனுடின்

zamமசீச-மீது  பாய்ந்து  பிறாண்டிய  சைனுடின்  மைடின், இப்போது  பார்வையை  மசீச-வின் நாளிதழான  த  ஸ்டார்மீது  திருப்பி  இருக்கிறார்.

அந்த  நாளிதழ்,  உள்ளுக்குள்-உறையும்  எதிரிகளின்  குரலாக  மாறுவதற்குமுன் மசீச  தலைவர்  லியோ  தியோங்  லாய்  அதை அடக்கிவைக்க  வேண்டும்  என்று    அந்த  முன்னாள்  தகவல்  அமைச்சர்  தம்  வலைப்பதிவில்  வலியுறுத்தினார்.

கடந்த  இரண்டு  தேர்தல்களின்போதும்   அந்நாளேடு  மசீச-வுக்கும்  பிஎன்-னுக்கும்  எதிராக  செயல்பட்டது  என்றவர்  கூறிக்கொண்டார்.

“2008, 2013  பொதுத்  தேர்தல்களின்போது  மசீச, அம்னோ, பிஎன்னைப்  பாதிக்கக்கூடிய  பல  விவகாரங்களை  அது  பெரிதுபடுத்தி வெளியிட்டது. மசீச  தலைவர்கள்  அதை  அறியாதிருந்திருக்கலாம்.

“அல்லது  அது (மசீச  தலைவர்களும்  சம்பந்தப்பட்ட)  ஒரு கூட்டு முயற்சியா?”, என்றவர்  வினவினார்.

த ஸ்டார்  நீண்டகாலமாகவே  டிஏபி-க்கும்  கிறிஸ்துவ  “தீவிரவாதிகளுக்கும்”  அனுசரணையாகவே  செயல்பட்டு  வருவதாகவும்  சைனுடின்  கூறினார்.