பிச்சை எடுப்பதும் இடுவதும் குற்றமே: தெங்கு அட்னான் பிடிவாதம்

adnanகோலாலும்பூரில்  பிச்சைக்காரர்களை  ஒழிக்கும்  இயக்கம் பற்றிக்  குறைகூறப்பட்டாலும்  அரசாங்கம்  அத்திட்டத்தைத்  தொடரும்.

சாலைகளில்  பிச்சை  எடுத்தால்  கோலாலும்பூர்  மாநகராட்சி  மன்றம்  அபராதம்  விதிக்கும்  எனக்  கூட்டரசு  பிரதேச  அமைச்சர்  தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூர்  கூறினார்.

“பிச்சை  இடுவோருக்கும்  எடுப்போருக்கும்  அழைப்பாணைகள்  (சம்மன்கள்)  கொடுக்கப்படும். கொடையளிப்பவர்களிடம்  நிறைய  பணம்  இருக்கும்  என்பதால் அவர்கள்  அபராதத்  தொகையை  உடனே கட்டும்படி  கேட்டுக்கொள்ளப்படுவார்கள்”, என மாநகராட்சி  மன்றத்தில்  செய்தியாளர்களிடம்  அவர்  கூறினார்.

இதனிடையே, இது  பற்றிக்  கருத்துரைத்த  லெம்பா  பந்தாய்  எம்பி  நுருல்  இஸ்ஸா  அன்வார், பிச்சை  எடுப்பாரும்  இடுவாரும்  தண்டிக்கப்படுவர்  என்று  கூறியதை  தெங்கு  அட்னான்  திரும்பப்  பெற்றுக்கொள்ள  வேண்டும்  என்று  குறிப்பிட்டார்.

“பிச்சை  எடுத்தலும்  வீடற்றோர்  விவகாரமும்  பரம ஏழ்மை  என்ற  நிலையுடன்  நெருங்கிய  தொடர்பு  கொண்டவை. அப்பிரச்னையைத்  தீர்க்கும்  அரசாங்க  முயற்சிகள்  இதுவரை  ஏமாற்றத்தைத்தான்  தந்துள்ளன”, என்று  நுருல்  ஓர்  அறிக்கையில்  குறிப்பிட்டார்.