தப்பு செய்யும் போலீஸ்காரர்கள் பாதுகாக்கப்படுவதில்லை என்பதை வலியுறுத்தும் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார், தப்பு செய்ததற்கு ஆதாரங்கள் இருக்குமானால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என்றார்.
மைவாட்ச் தலைவர் ஆர்.ஸ்ரீ சஞ்சீவன் அம்பலப்படுத்திய பல விவகாரங்கள் குறித்து கருத்துரைத்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
சஞ்சீவன் போலீசுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தினாலும் விசாரணைக்கு ஒத்துழைப்பதில்லை என காலிட் கூறினார்.
“ஆதாரங்கள் இருக்கும்பட்சத்தில் எங்கள் ஆள்களைப் பாதுகாக்க மாட்டோம். குற்றவியல் வழக்குகளில் எப்போதாவது எங்கள் ஆள்களைப் பாதுகாத்திருக்கிறோமா? ஆதாரங்கள் இருந்தால் கொண்டு வாருங்கள்.
“சஞ்சீவனும் அப்படித்தான். அதையும் இதையும் சொல்கிறார். (தகவல்பெற) அதிகாரிகளை அனுப்பினால் ஆதாரங்களைக் கொடுக்க மறுக்கிறார்”, என்றாரவர்.
அது உன் சொந்த சட்டத்தில் உள்ள act
பகோஸ் துவான்.
நீயே ஒழுங்கு இல்லை , அப்புறம் என்ன சொல்றது ?
வாய்பேச்சு வீரரே, ஆதாரம் வைத்துக் கொண்டு தப்பு செய்வதற்கு போலிஸ்காரன் என்ன முட்டாளா?. அப்படியே ஒரு சில முட்டாள் போலீஸ்காரர்கள் செய்யும் தவற்றை கண்டுப் பிடித்து சஞ்சீவன், ராஜிப் போன்றோர் அம்பலப்படுத்தினால் அவர்களை அச்சுறுத்த, கொல்ல செல்லும் கூலிப் படைக்கு கவசம் அளிப்பது யாரோ?. தங்கள் கூற்றுப்படி பார்த்தால் பல தலைமை போலிஸ் அதிகாரிகள் இன்று கம்பி எண்ணிக் கொண்டிருக்க வேண்டுமே?. வேலியே பயிரை மேய்ந்த கதை தெரியாதோ?.
நீங்கள் கூறுவதை நாங்கள் அப்படியே நம்பிவிட்டோம் .சரியா!!!?
தப்பு செய்யும் போலீஸ்காரர்கள் பாதுகாக்கப்படுவதில்லை என்பதை வலியுறுத்தும் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார், தப்பு செய்யும் அல்லது செய்த பாரிசான், குறிப்பாக அம்னோ அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என்று நிரூபித்துக் காட்ட முடியுமா? வெறும் வெட்டிப் பேச்சில் வீரன்…!!!!! அல்தான்துன்யா கொலை வழக்கில் என்ன ஆனது??? குற்றவாளி யார்??? ஏன் யுதிகே போலீஸ்காரர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர்???? இவர்களுக்கும் அல்தான்துன்யாவுக்கும் என்ன விரோதமா??? உண்மை பதில் தெரியும்வரி நீர் சொல்வதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கே!!!!!…..
முதலில் இந்த ஆசாமி சட்டத்தை மதிக்க தவறியன் என்பது உண்மை …
பிறகு எப்படி மக்கள் சட்டத்தை அமுல்படுத்துவான் என்று மக்கள் நம்புவார்கள் …. போட்டிருக்கும் சட்டைக்கு மதிப்பே இல்லை … பேச வந்திட்டான் …… உதவாக்கரை …. இதே செயலை ஒரு சீன அல்லது இந்திய உயர் அதிகாரி ஐ கி பி யாக இருந்து செய்திருந்தால் பிரதமரும் இவரை பதவிக்கு நியமன ஒப்புதல் வழங்கிய ஆகோணும் சும்மா இருப்பார்களா !இல்லை பெர்காச, இச் மா சொம்மா இருக்குமா …. !
உண்மையிலேயே தப்பு செய்யும் போலீஸ்காரர்களை நீங்கள் பாதுகாப்பதில்லை என்றால் நல்லது…. அதுவே மக்களுக்கும் வேண்டும்… வெளியே பயிரை மேய்ந்தது என்று பலமுறை கேள்விப்பட்டுள்ளோம்.
உண்மையிலேயே தப்பு செய்யும் போலீஸ்காரர்களை நீங்கள் பாதுகாப்பதில்லை என்றால் நல்லது…. அதுவே மக்களுக்கும் வேண்டும்… வேலியே பயிரை மேய்ந்தது என்று பலமுறை கேள்விப்பட்டுள்ளோம்.
ஏண்டா எருமை !!! ஏன் வாயை கொடுத்து சூ…. புண்ணாக்கி கொள்கிறாய் ???
ஹஹஹ -இவனைப்போன்ற கூறு கேட்ட ஜென்மங்கள் ஏராளம்–காரணம் குளிர்சாதன அறையில் உட்கார்ந்து கொண்டு தூங்கி கொண்டிருக்கும் அம்னோ கை கூலிகளில் இவனும் ஒருவன். அதிகாரத்தில் உள்ள மடையர்கள் ஏராளம். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை
போக்குவரத்து போலீசார் தினந்தோறோம் லச்சம் வாங்குகிறார்கள் என்பதை இந்த நாடே அறியும்.குறிப்பாக சர்ஜன் பதவிக்கு மேல் உள்ளவர்கள் ஒவ்வொரு சாலை விபத்திலும் குறைந்தது 500 முதல் 1,000 ரிங்கிட் வரை கையுட்டு வாங்குகின்றனர்.இதே போல் போக்குவரத்து பொலிசாரில் 100, 80% கையுட்டு வாங்கின்றனர் என்பதும் இந்த நாடு அறிந்த விவரம் தன .ஆனால் போலிஸ் துறைக்கு மட்டும் இது தெரியாது.கேட்டால் ஆதாரம் இல்லை என்று சொல்வார்கள்.
போலிஸ் படையில் சேரும் பொது உள்ள சொத்து விவரம். போலிஸ் படையில் சேர்ந்து 5 ஆண்டுகளில் சேர்த்த சொத்து விவரம். பின்னர் 10 ஆண்டுகளில், 20 ஆண்டுகளில் என்று சோதனை நடத்தினால், ஒவ்வொரு போலிஸ் அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரம் தெரியும்.பொலிசாரின் ஊழால் அப்போது தன அம்பலத்திக்கு வரும்.இன்றைக்கும் பொலிசாரில் எவ்வளு பேர் ஊழலில் ஈடுபடுகின்றனர் என்பது அத்துரையினருக்கு தெரியும் .ஆனால் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.என்று அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு தேவையில்லையோ அன்று தன அவர்களுக்கு எதிராக அங்கும் இங்கும் என்று கண் துடைபிக்கு நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை இந்த நாடே அறிந்த மா பெரும் ரகசியம்.
அன்பர்களே, ஏன் கையூட்டு கொடுக்கிறீர்கள்??? தப்பு செய்தால் அதற்கான சம்மனை வாங்கிக் கொள்ளுங்கள்.. போக்குவரத்து சிறு குற்றங்களுக்கான அபராத தொகையினை குற்றத்துக்கேற்றார்போல் நிர்ணயிக்கவேண்டும்… அப்போது லஞ்சம் கொடுப்பதில் பயனில்லை என்பதை உணர்ந்து சம்மன்களை பெற்றுக் கொள்வர். தொகையை செலுத்த போலிஸ் நிலையத்துக்கு அலைவதே பெருந் தண்டனையாக கொள்வர். லஞ்சமும் குறையும் போக்குவரத்து குற்றமும் குறையும்…. செய்த தவறையே மீண்டும் மீண்டும் செய்வோருக்கு தண்டனையை அதிகரிக்கலாம்…
” BRIM ” BUDAYA RASUAH 1 MALAYSIA -வை வெற்றிகரமாக அமல் படுத்தும் போக்குவரத்து போலீசார் மீது லஞ்ச குற்றச்சாட்டா ???
மாட்டு தலை உங்கள் வீட்டு வாசல் முன் போட வேண்டுமா ???
ஜாக்கிரதை !!!
உண்மையற்ற, நம்ப முடியாதவற்றை உண்மைபோல் நம்பும்படி சொல்வதில் நாங்கள் மிகவும் வல்லவர்கள். நம் நாட்டில் தவறு செய்யாத காவல்துறை அதிகாரிகள் எத்தனை சதவீதம் என்பது அநேகருக்கு தெரிந்த உண்மை. ஆனால் அது இவருக்கு மட்டும் தெரியாமல் இருப்பது….?!