வீடுவாசலற்றோருக்கும் அவர்களுக்கு உதவுவோருக்கும் எதிரான அத்தனை நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும் என்று கிறிஸ்துவ அமைப்பு ஒன்று அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.
சமுதாயத்தில் வறிய நிலையில் உள்ளவர்களுக்கு எதிராகவும் அவர்களுக்கு உதவி ‘பரிவுள்ள சமுதாயம்’ என்று காண்பித்துக்கொள்வோருக்கும் எதிராகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதைக் கண்டு வருத்தமடைவதாக தேவாலயங்கள் மன்ற(சிசிஎம்) இளைஞர் பகுதி கூறியது.
மில்லியன் கணக்கான மலேசியர்கள், நோன்பிருந்தும் இறைவழிபாட்டில் ஈடுபட்டும் தானதர்மங்கள் செய்துகொண்டுமுள்ள இந்த நேரத்தில் இப்படி அறிவித்திருப்பது “இரக்கமற்ற, பரிவற்ற செயலாகும்” என்று அது கூறிற்று.
ஆடு நனைதுண்டு ஓநாய் அழுதுசாம்….
தெங்கு அட்னானின் கருத்தும் நடவடிக்கையும் ,”தானும் படுக்க மாட்டான் , தள்ளியும் படுக்க மாட்டான் ” என்ற வார்த்தைதான் ஞாபகம் வருகிறது !