கூட்டரசு பிரதேசத்தில் வீடுவாசலற்று சுற்றித்திரிவோரை ஒழித்துக்கட்டப்போவதாக சூளுரைக்கும் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர், அவர்கள் அத்தனை பேருக்கும் அவரது வீட்டிலேயே இடமளிக்கலாம்.
ஜாலான் டூட்டாவில் உள்ள தெங்கு அட்னானின் நான்கு-மாடி வீடு அவ்வளவு பெரிது என்கிறார் பிகேஆர் எம்பி, என்.சுரேந்திரன்.
அத்துடன் கோலாலும்பூரில் தடைவிதிக்கப்பட்ட கஞ்சித் தொட்டிகளை அவரது வீட்டின் அழகான தோட்டத்தில் அமைத்து அன்னதானம் செய்யவும் ஏற்பாடு செய்யலாம்.
“ஏழைகளை இழிவுபடுத்திய அவர் அதற்குப் பரிகாரமாக இதையாவது செய்யலாம்”, என்றாரவர்..
ஐய்யா சுரேன் அவர்களே ,உங்கள் கோபம் நியாயமானதே .சீன கம்யுனிஸ்ட் தலைவர் மா சே துங் கூறுகின்றார் …” ஒரு அகதிக்கு மீனை கொடுப்பதைவிட ,அவனுக்கு ஒரு வலையை கொடு ” என்று .தெங்கு அட்னான் அவர்களுக்கு பிச்சைகாரர்கள் மேல் நடவடிக்கை எடுப்பதை மட்டும்தான் நடைமுறைபடுத்த தெரியும் .மேலும் பல ஏழைகலும் ,பிச்சை எடுப்பவர்களும் உருவாகாமல் இருக்க என்ன வழி மற்றும் இவர்களின் மறுவாழ்வு திட்டம் போன்ற திட்டங்களை யோசிக்க தெரியவில்லை பாவம் விடுங்கள் .
என்ன காணாம போன கானாங் கோழிமாதிரி இந்த சுரேந்திரன் உளறுகிறார் .கோலாலம்பூர் பட்டணத்தை நள்ளிரவு ஒரு முறை தனியகா நடந்து கண்காணிக்கவும் ,குறிப்பாக பாங்கொக் பேங்க் பக்கம் போய் ஒருக்கா பார்த்துட்டு அறிக்கை விடவும் .எதற்கெடுத்தாலும் அரசியல் .என்னடா கருமம் இது ,எல்லாரும் இப்படிதான் இருக்கானுங்க .