கோலாலும்பூர் மையப்பகுதியில் பிச்சை எடுப்போரை அப்புறப்படுத்துவதையும் அவர்களுக்கு உணவளிப்பதைத் தடுப்பதையும் வைத்து ஏழைகளிடம் தான் இரக்கமற்று நடந்துகொள்வதாக யாரும் எண்ணி விடலாகாது எனக் கூறும் கூட்டரசு பிரதேச அமைச்சு, ஏழைகளுக்கும் வீடற்றோருக்கும் ஓரிட மையம் ஒன்று அமைக்கும் திட்டமொன்று உருவாகிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டது.
அதற்குப் பொருத்தமான பல இடங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக அது தெரிவித்தது. அம்மையம், அஞ்சோங் சிங்கா கோட்பாட்டின் அடிப்படையில் தங்கும்வசதி, உடல்நலக் கவனிப்புச் சேவை, சலவைசெய்யும் சேவை முதலியவற்றை வழங்குவதுடன் வீடற்றோர் தங்களைப் பதிவுசெய்துகொள்வதற்கான பதிவகமாகவும் விளங்கும்.