நல்லிணக்க சட்டவரைவுகள் குறித்து பெர்காசா ஆதரவாளர்களுடன் கலந்தாலோசிப்பீர்

perkasaபிரதமர்  நஜிப் அப்துல்  ரசாக், தேசிய  ஒற்றுமை, நல்லிணக்க  சட்டவரைவுகளை  அமல்படுத்துவதற்குமுன்  முன்னாள்  தலைவர்களுடனும் முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  முன்னாள்  தலைமை  நீதிபதி  அப்துல்  ஹமிட்  முகம்மட்,  முன்னாள்  போலீஸ்  படைத்  தலைவர்  அப்துல்  ரஹிம்  நூர்  போன்ற  பெர்காசா  ஆதரவாளர்களுடனும்  கலந்து  பேச  வேண்டும்.

அப்புதிய  சட்டவரைவுகளைச்  செயல்படுத்த  அவசரப்படக்கூடாது  என்று  வலியுறுத்திய  பெர்காசா  தலைவர்  இப்ராகிம்  அலி,    உள்நாட்டுப் பாதுகாப்புச்  சட்டத்தை (ஐஎஸ்ஏ) மீட்டுக்கொண்டபோது  ஏற்பட்ட  அனுபவங்களை நஜிப் மறந்துவிடக்  கூடாது என்றார்.

“அதனால்தான்   மகாதிர்,  ஹமிட்,  ரகிம்  ஆகியோருடனும்  முன்னாள்  தலைமை  நீதிபதி  அஹ்மட்  பைருஸ்  ஷேக்  அப்துல்  ஹாலிம், ஸாக்கி  அஸ்மி  போன்றோருடனும்  நஜிப் கலந்தாலோசிக்க  வேண்டும்  எனக்  கேட்டுக்கொள்கிறோம்”, என்றாரவர்.