கொலம்பியாவை வென்று அரையிறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெற்றது பிரேசில்

brasilபிரேசிலுக்குக்   கிடைத்த  ‘பிரி  கிக்கை’ அற்புதமாக  அடித்து  கோலாக்கி  தம்  குழுவுக்கு  வெற்றியைத்  தேடித்தந்தார் டேவிட்  லூயிஸ். இவ்வெற்றியால்  பிரேசில்  அரையிறுதி  ஆட்டத்துக்குச்  செல்கிறது. அங்கு  அது  ஜெர்மனியுடன்  மோதும்.

கேப்டன்  தியாகோ  பிரேசிலின்  முதலாவது  கோலைப்  புகுத்தினார். பின்னர்  லூயிஸ்  30–மீட்டர்  பிரி  கிக்கைக்  கோலாக்கி  கோல்  எண்ணிக்கையை இரண்டாக்கினார்.

ஆட்டம்  முடிய  10  நிமிடம்  இருந்தபோது  கொலம்பியா, அதற்குக்  கிடைத்த  ‘பெனால்டி’யைக்  கோலாக்கியது. ஆனால், அதன்பின்னர்  எவ்வளவு  முயன்றும்  அதனால்  கோல்  அடிக்க  முடியவில்லை.

எனவே, ஆட்டம் 2-1  என  பிரேசிலுக்கு  வெற்றியாக  முடிந்தது.

இதற்கு முன்னர் நடந்த  மற்றொரு  காலிறுதி  ஆட்டத்தில்,  ஜெர்மனி  1-0  என்ற  கோல்  எண்ணிக்கையில்  பிரான்சைத்  தோற்கடித்தது.

ஜெர்மனியின்  கோலை  மாட்ஸ் ஹம்மல்ஸ்  புகுத்தினார்.