ஸைட் இப்ராகிம்: முஸ்லிம் உணவகங்கள் பிற்பகல் மணி 3.00க்கு முன்பு திறக்கக்கூடாது என்றால்?

 

Zaid - Good Muslimமுஸ்லிம் உணவகங்கள் நோன்பு காலத்தில் பிற்பகல் மணி 3.00 க்கு முன்பாக திறக்கக்கூடாது என்று விடுக்கப்பட்டுள்ள உத்தரவை முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் கடுமையாகக் குறைகூறியுள்ளார்.

கெடா மாநில அரசு இவ்வாறான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அவ்வுத்தரவை ஆதரித்து பிரதமர்துறை அமைச்சர் ஜமில் கிரி பஹாரும் இன்று ஒரு நினைவுறுத்தலை வெளியிட்டுள்ளார்.

முஸ்லிம்கள் மீது தலைவர்களுக்கு நம்பிக்கை இல்லாதது போல் தோன்றுகிறது ஸைட் கூறினார்.

“கடைகள் திறக்காமல் இருப்பதால்தான் முஸ்லிம்கள் நோன்பு இருக்கிறார்கள் என்றால், மலேசியன் இஸ்லாமிய மேம்பாட்டு இலாகா (ஜாகிம்) தோல்வி கண்டு விட்டது”, என்று ஸைட் டிவிட் செய்துள்ளார்.
)
முஸ்லிம் உணவகங்கள் பிற்பகல் மணி 3.00க்கு பின்னர்தான் திறக்கலாம் என்றால், அவ்வுணவகங்களின் “வாடகை மற்றும் உரிமம் போன்றவற்றுக்கான கட்டணங்களை ஜாகிம் திருப்பித் தருமா என்று அவர் வினவினார்.

“அவர்களை (முஸ்லிம்களை) இன்னும் கூடுதலாக அடக்கி வைக்கப்பது தேவைப்படுகிறது என்று தலைவர்கள் கூறுகின்றனர். அவர்களை மூளைச்சலவை செய்ய வேண்டும் என்கின்றனர். அவர்கள் எப்போது உண்ண வேண்டும், எப்போது கடைகளைத் திறக்க வேண்டும் மற்றும் என்ன உடை அணிய வேண்டும் என்று கூறுகின்றனர்”, என்று ஸைட் இப்ராகிம் மேலும் டிவிட் செய்துள்ளார்.