மே 13 என்று மிரட்டும் முகைதின் யாசின் துணைப் பிரதமராக இருக்கத் தகுதியற்றவர் என விளாசியுள்ளார் டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்.
முகைதின் விடுத்துள்ள மிரட்டலை, நினைவுறுத்தல் என்று வருணித்து அவருக்கு வக்காலத்து வாங்கும் மசீச தலைவர் லியோ தியோங் லாயையும் லிம் சாடினார்.
இதுவரை எந்தவொரு பிரதமரோ துணைப்பிரதமரோ இன்னொரு மே 13 பற்றி மிரட்டியதில்லை என்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்ட லிம், அமைச்சரவை அது பற்றி அவரிடம் கேட்குமா, கேட்கும் துணிச்சல் கொண்ட அமைச்சர்கள் எவரேனும் உண்டா எனவும் வினவினார்.
சோரம் போன அமைச்சர்கள் அதிகமோ ?!
அதனால் தான் முதுகு எலும்பு இல்லாதவர்கள் போல்
சுருண்டு மூலையில் முடங்கிக் கிடக்கிறார்களோ !!!
இவர்களையும் நம்பி இந்த சமுதாயம் இன்னும்
இவர்கள் பின்னால் அணிவகுப்பது தான் …;
நாம் எங்கே போகிறோம் ???
அடக்கி வைக்க வேண்டியவர்களை எல்லாம் வரையறை
இல்லாமல் இனத் துவேசம் பண்ண விட்டு ; இன்று
எதை நினைத்தோ இந்த பேச்சு !
உடனே பெர்கசா முகைதீனை ஆதரிக்கும். இது தான் நடைமுறை. ஒன்று மட்டும் நிச்சயம். இந்த மே 13 வைத்துக்கொண்டு இவர்கள் ஆட்சியைத் தங்கள் வசம் வைத்துக்கொள்ள நினைக்கின்றனர். மே 13 என்றால் உங்களையும் சேர்த்துத் தானே?
முகைதின் விடுத்துள்ள மிரட்டலை, நினைவுறுத்தல் என்று வருணித்து அவருக்கு வக்காலத்து வாங்கும் மசீச தலைவர் லியோ தியோங் லாயையும் லிம் சாடினார். இப்போதுதானே அமைச்சர் பதவி கிடைத்தது. அதற்குள் எப்படி எஜமானை குறை சொல்வது??? அமைச்சர் மாவும் லியோவின் அறிக்கைக்கு ஆதரவாக அறிக்கைவிட்டுள்ளார்..
இவர்கள் இருவரும் தைரியமாக துனைப்பிரதமருக்கு கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும்..அல்லது குறைந்தபட்சம் துணைப் பிரதமரிடம் நீங்கள் இப்படிச் சொல்ல கூடாது, இம்மாதிரியான கறுப்புச் சம்பவம் இனி நடக்கக்கூடாது, இம்மாதிரியான சம்பவத்துக்கு ஈட்டிச்செல்லும் அறிக்கைகளுக்கோ அல்லது அறிக்கை விடுவோருக்கோ எதிரே கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கை விடுவது நல்லது என்று துனைபிரதமாரிடம் அறிவுரை சொல்லி இருக்க வேண்டும்…
நான் கூறியது போல் அம்நோகாரன் கள் மே 13 நடக்கவே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தும் ஆதரித்தும் குட்டையை குழப்பியும் கொலை வெறியுடன் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். அதை காரணமாக்கி மலாய் காரர் அல்லாதாரை ஒழித்து கட்டவே இவ்வளவும்.அதிலும் எல்லாமே இவன்கள் கையில்.இப்போது.
அது தெரிஞ்ச விசியம் தானே!!!!!
ஐயா ராசா ,முதலில் அன்வார் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு தகுதியனவர்தானா என்பதை பாக்கத்தான் ஆராயவேண்டும் ,சொந்த கட்சி உள்விவகாரத்தை தீர்க்க முடியாமல் திணறி ஆட்டம் கண்டு இருக்கும் அன்வரின் தற்பொழுது நிலைப்பாடு என்ன ?என்பதை அலசி ஆராயுங்கள் ,அன்வார்மிது பக்காதனுக்கு நம்பிக்கை இருக்கிறதா என்பதை முதலில் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் ஆராயுங்கள் ? பினாங்கு மாநிலம் போல் இங்கு மக்களுக்காக ஆட்சி சிலாங்கூர் மாநிலத்தில் இருந்தால் இந்த கருத்தை எழுதிருக்க மாட்டேன் ,இங்கு யாரை கழுட்டி விட்டு பதவியை அடையலாம் என்ற போர்தான் நடக்கிறது ,பக்காதானை நம்பிய சிலாங்கூர் மாநில மக்களுக்கு இவர்கள் குடுமிசண்டையில் நாமத்தை போட்டுவிடுவார்கள் போலருக்கு ,ஒருமாநில பிரச்சனையை தீர்க்க திணறும் அன்வார் பிரதமர் வேட்பாளருக்கு தகுதியானவர்தானா ? என்பதை பாக்காதான் ராக்யாட் ஆராய வேண்டிய தருணம் இது நினைக்கிறன் .இந்த முகிடினின் ஒரு செல்லாகாசு இவனுடைய பேச்சை விமர்சனம் செய்தால் நாம் அவன் கருத்துக்கு ஆடிவிட்டோம் ,நடுங்கி விட்டோம் என்று வீரவசனம் பேசுவான் ,ஆகையால் அவனை விட்டு விட்டு சிலாங்கூர் மாநிலத்தில் நடக்கும் பதவி போருக்கு பாக்காதான் ராக்யாட் தலைவர்கள் முற்று புள்ளி வைக்க வேண்டும் .மக்கள் நம்பிக்கை இழக்கதுவங்கி விட்டனர் .
அதான் நெத்தியில அடிச்சு வச்ச மாதிரி தெரியுதே!. நாளையே இவர் இந்நாட்டு பிரதமரானால் இந்நாட்டின் நிலை என்ன?. நினைத்துப் பார்க்கவே விகாரமாக இருக்கின்றது!.
இவன் இன்னும் அவன் தாத்தா,பாட்டி காலத்கில் இருந்து கொண்டு தப்பாய் போதையில் மூளை கெட்டு உளறுகிறான் !!!!
துங்கு அப்துல் ரஹ்மான் மட்டுமே இந்நாட்டில் பல இன அமைதியும் ஒத்து உழைப்பும் இருக்க வேண்டும் என்று எண்ணியவர். அவர்க்கு பிறகு எல்லாமே இன வெறியன்கள்–காரணம் சம்பந்தனும் டான் சியுவ் சின்னும்.தான். ஆனாலும் துங்கு செய்த தவற்றினால் தான் இன பிரச்னை ஆரம்பித்ததே. இன்று தலை விரித்தாடுகிறது.
அவன் மூஞ்சை பார்த்தால் தெரியவில்லைய மட சாம்பிராணி என்று
ஏதோ மனுசன் தெரியாமல் சொல்லி விட்டார், அதை ஊதி பெரிதாக்கி அரசியல் லாபம் தேட முயற்சிக்கின்றனர் இந்த டி.ஏ.பி. காரன்கள். இதையே இன்னும் ஒரு வாரத்திற்கு ஓட்டுவார்கள் இந்த டி.ஏ.பி.காரன்கள்.