பதவி விலகப்போவது உண்மையா என்று கேட்டதற்கு அது வீண் புரளி என்றார் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம்.
“அதில் (வதந்தியில்) உண்மை இல்லை. ஒரு கூட்டத்திலிருந்து வருகிறேன். இன்னொரு கூட்டத்துக்குச் செல்கிறேன்”, என்றாரவர்.
பாங்குனான் டாருல் எஷானில் செய்தியாளர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு பதவி விலகல் பற்றி வினவியதற்கு காலிட் விரிவாக எதையும் கூறவில்லை.
அது, கட்சியில் அவரை எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் கட்டிவிட்ட கதையா என்று கேட்டதற்கு வெறுமனே சிரித்தார்.
“போகட்டும், விடுங்கள். ரமலான் மாதத்தில் பொய் சொல்லக்கூடாது”, என்று கூறியவாறு காரில் புறப்பட்டுச் சென்றார்.
மக்கள் பணத்தை இன்னும் கொள்ளை அடிக்க வேண்டும் என்று இறுமாப்பு .
மக்களின் உணர்வை அறிந்து செயல்படுபவரே தலைவர் பொறுப்புக்கு தகுதியானவர். மக்கள் வாக்கே மகேசன் வாக்கு.
ஐயா ,காலித் உங்கள் பதவி பறிபோவது வெகு தூரத்தில் இல்லை .
நம்மிடையே புரளி, வதந்தி என்றெல்லாம் ஒன்றும் இல்லை. நெருப்பில்லாமல் புகை இல்லை என்பது மட்டுமே உண்மை. கத்தரிக்காய் முற்றினால் சந்தைக்கு வந்தாக வேண்டுமே…அந்த நாள் வெகுதூரம் இல்லை.அப்போதும் அதை ‘புரளி’ என்பாரா இவர்? பொறுத்திருப்போம்.
காலிட் ஓகே தான் கூட இருக்கிற திருடு கம்நாடிங்க ஒன்னு பண்ண முடியல அதுதான் காலிட் வெரடுரங்க ஒரு நல்ல மனுசன விடுங்க டா வீனா போன அன்வர் இப்ராஹீ பதவி ஆசை புடிச்சி திரியரன் அவர வெரடு ங்க அதுதான் நாயம்
காலம் பதில் சொல்லும், அது வரை மெளனம் சாதிப்போம்.
SAMUNDI முடு