மைகார்ட் அடையாள அட்டையைப் புதுப்பித்தால் மட்டுமே பெட்ரோல் வாங்க முடியும் என்பது ஒரு வதந்தி என்றும் அதை நம்ப வேண்டாம் என்றும் தேசிய பதிவுத் துறை (என்ஆர்டி) அறிவித்துள்ளது.
அப்படி ஒரு அறிக்கையை என்ஆர்டி வெளியிடவில்லை என்று கூறிய அதன் தலைமை-இயக்குனர் சுலைமான் கிளிங், அதில் உண்மை இல்லை என்றார்.
“எஸ்எம்எஸ், வாட்ஸ்எப், முகநூல் முதலியவற்றில் அப்படி ஒரு பொய் பரப்பப்பட்டு வருகிறது”, என்று கூறிய அவர், மக்கள் அதைப் புறக்கணிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.