முஸ்லிம்கள் முன்னேரத்தில் உணவு விற்பது தவறல்ல

asriரமலான்  மாதத்தில்  முஸ்லிம்கள்  முன்னேரத்தில்  உணவு  விற்பதில்  தவறில்லை  என்று முன்னாள்  பெர்லிஸ்  முப்தி  முகம்மட்  அஸ்ரி  சைனுல்  அபிடின்  கூறினார்.

“நோன்பிருக்காத  முஸ்லிம்-அல்லாதாருக்கு  உணவு விற்பது  குற்றமல்ல”, என  அஸ்ரி  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

மேலும், மாதவிலக்கு  உள்ளவர்கள், நோயாளிகள், சிறார்கள், பயணிகள்  போன்றோர்  நோன்பிருக்க  வேண்டியதில்லை  என்றாரவர்.

“ஒருவர்  மாதவிலக்குள்ள  மனைவிக்கு  அல்லது  தம்  பிள்ளைகளுக்காக  உணவு  வாங்க  விரும்பலாம். பயணிகள்  இருக்கிறார்கள்,  உணவை  வாங்கிச்  சென்று  தங்கள்  அறைகளில்  வைத்து  உண்ண  விரும்பலாம்”.

இவர்களைப்  போன்றவர்களுக்காக  முன்னேரத்தில்  உணவு  விற்பது  தவறல்ல  என்று  அஸ்ரி  கூறினார்.

கெடாவில், முஸ்லிம்களுக்குச்  சொந்தமான  உணவகங்கள்  பிற்பகல்  மூன்று  மணிக்குமுன்  கடைதிறந்தால்  அவற்றின்  உரிமம்  பறிக்கப்படும்  என  ஆட்சிக்குழு  உறுப்பினர்  பத்ரோல்  ஹிஷாம்  ஹஷிம்  கூறி  இருப்பது  பற்றி  அஸ்ரி  இவ்வாறு  கருத்துரைத்தார்.