இன்று காலை 10 மணிக்கு பிரதமர் அலுவலகத்தின் செய்தியாளர் கூட்டத்துக்குச் செய்திகள் சேகரிக்கச் சென்ற மலேசியாகினி செய்தியாளரும் படப்பிடிப்பாளரும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
“விஜய்” எனப் பெயர்பட்டை அணிந்திருந்த அதிகாரி ஒருவர் பிரதமர் அலுவலகத்தில் நுழைய மலேசியாகினிக்கும் மலேசியன் இன்சைடருக்கும்(டிஎம்ஐ) அனுமதி இல்லை என்றார்.
கடந்த வெள்ளிக்கிழமை மலேசியாகினி அங்கு சென்று செய்தி சேகரித்தது அவருக்குச் சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கு அவர், “இன்று முதல் மலேசியாகினிக்கும் டிஎம்ஐ-க்கும் அனுமதி இல்லை”, என்றார்.
பத்திரிகை சுதந்திரம் பிரதமர் அலுவலகத்தில் தலைவிரித்தாடுகிறது. அரண்டவனுக்குத்தானே இருண்டதெல்லாம் பேய்.. பிரதமரே உமக்கு ஏன் நடுக்கம்???
ஆமாம் நேர்மையாக ,உண்மையாக மக்களுக்கு உண்மையை வெளிச்சம் போட்டு காட்டும் மலேசியா கினியை அவர்கள் தடுப்பது வேடிக்கை ஒன்றும் இல்லை ,காரணம் அந்த செய்தியாளர் கூட்டதில் எந்த நேர்மையான செய்தியும் ,நம்பும்படியான விளக்கமும் இருக்காது ,அதை மலேசியாகினி நேர்மையாக எழுதும் ,ஆளும்கட்சிக்கு எரிச்சலாகத்தான் இருக்கும் ,தகவல் ஊடகங்கங்களை பிரித்தாளும் போக்கை மலேசியா அரசாங்கம் கைவிடவேண்டும் ,தகவல் ஊடகங்கள் அரசாங்கசார்ந்த செய்திகளை சேகரிப்பதை தடுப்பது அறிவிழந்த செயல் மட்டும் அல்லாமல் அது அரசாங்கத்தின் நேர்மைக்கு விடுக்கப்பட்ட கேள்வி குறியும் .இதுதான் இந்த நாட்டின் தகவல் ஊடகங்களின் சுகந்திரமா ? யார் அந்த விஜய் ,அவருக்கு யார் இந்த உத்தரவை கொடுத்தது ? பிரதமரா ? உள்துறை அமைச்சா ? செய்தியாளர் கூட்டம் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு அங்கு குறிப்பிட்ட ஊடகங்களுக்கு மட்டும் அனுமதி என்றால் இது மிக பெரிய முறையற்ற செயல் .அரசாங்கத்தின் நேர்மை என்னவென்று இதில் இருந்து தெரிகிறது .
பன்றிகளின் கூடரட்தில் கன்று குட்டிக்கு என்ன வேலை ?
உண்மைய சொன்னால் நொல்லை கண்ணுக்கு பிடிக்காது அதான் கை கூலிகலை ஏவி விட்டாங்கள் .