பினாங்கில் வீடற்றோருக்கு எதிராக நடவடிக்கை இல்லை

penangபினாங்கு  அரசு,  வீடற்றோருக்கு  எதிராக  அல்லது  அவர்களுக்கு  உணவளிப்போருக்கு  எதிராக  நடவடிக்கை எடுக்காது  என  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்  கூறியுள்ளார்.

“பிச்சைக்காரர்களுக்கு  அன்னதானம்  செய்தால்  அபராதம் ரிம150  எனக்  கூட்டரசு  அரசாங்கம்  அறிவித்துள்ளது.  இதை  ஏற்பதற்கில்லை. பினாங்கு  அதுபோன்ற  நடவடிக்கையில்  இறங்காது”, என்றாரவர்.

நேற்றிரவு  ஜாலான்  பினாங்கில்  உள்ள  உணவுதானம்  செய்யும்  த  லைட்ஹவுஸ் அமைப்புக்குச்  சென்று  பார்வையிட்ட  லிம்,  அதற்கு  முதல்வர்  நிதியிலிருந்து  ரிம20,000  வழங்கினார்.