இனங்களுக்கிடையிலும் சமயங்களுக்கிடையிலும் வெறுப்புணர்வை முடிவுக்குக் கொண்டுவருவதில் பிஎன் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், மலேசியாவில் மே 13-இல் ஏற்பட்டதைப் போன்ற இனக் கலவரம் மீண்டும் நடப்பதைத் தடுப்பதில் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க பக்காத்தான் ரக்யாட் தயாராக உள்ளது.
டிஏபி-இன் தேசிய ஆலோசகர் லிம் கிட் சியாங் இவ்வாறு கூறினார்.
அதற்கு முன்னாள் ஆளும் கட்சி ஒன்றைச் செய்ய வேண்டும். அது, மலாய்க்காரர்- அல்லாதாரும் முஸ்லிம்- அல்லாதாரும் நாட்டைச் சீர்குலைக்க முயல்வதாகக் குற்றம்சாட்டுவதையும் மிரட்டுவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் அல்லது அதை நிரூபிக்க வேண்டும் என்றாரவர்.
திரு. லிம் கிட் சியாங் அவர்களே! நம் நாட்டில் மே 13 போன்றதொரு சம்பவம் மீண்டும் நடக்க வாய்ப்பே இல்லை. குழப்பம் வேண்டாம். நாட்டு மக்கள் தெள்ளத் தெளிவாக உள்ளனர். அம்னோ தொடர்ந்து ஆட்சியில் இருக்க அவ்வப்போது காட்டப்படும் பூச்சாண்டியே இந்த மே 13 என அனைவரும் அறிவோம். அப்படியே அதைப்போன்றதொரு கலவரம் நடைப்பெறும் சாத்தியம் இருக்குமேயானால், அதனை ஆரம்பிக்கப் போவது யார் என இந்த முகிடீன் உளரும் தைரியம் உண்டா?
திரு லிம் அவர்களே, இன்னொரு மே13 இனக்கலவரம் வர சற்றும் வாய்ப்பில்லை. காரணம், மக்கள் ஒற்றுமை அமைதியின் அருமையை நன்கு உணர்ந்துள்ளனர். இதுமற்றுமின்றி, மலாய்க்காரர்களில் பெரும்பாலோர் அம்னோவை எதிர்க்கின்றனர். மலாய்க்காரர்களின் ஆதரவு அம்னோவுக்கு மங்குவதைக் கண்டு அஞ்சி இம்மாதிரியான குழப்பத்தை உண்டுபண்ணுகிறார்கள் ஒரு சில சுயநல அரசியல்வாதிகள்!!!!
ஜுல்கிப்லி நோர்டின் இந்த மே13ஐ குறித்து ஒரு அறிக்கை விட்டுள்ளான்..முதலில் இந்த இனவாதியை உள்ளே போடணும்!!!!!
பாட்டன் காலத்தில் நடந்த சம்பவத்தை கூறி சில உலகம் புரியாத ஜென்மங்கள் குளிர் காய பார்க்கின்றது !!!
மலேசிய மக்கள் அறிவாளிகள், இது போன்ற துயர சம்பவம் இங்கு நடப்பதற்கான வாய்ப்புகள் அறவை இல்லை, துணைப் பிரதமர் கூறிய கருத்தினை ஊதி பெரிதாக்கி அரசியல் லாபம் தேட முயற்சிக்கின்றனர் இந்த டி.ஏ.பி காரன்கள்.