ஜோகூர் பாரு மலாய்க்காரர் கையிலிருந்து நழுவிச் செல்லலாம்: மகாதிர் எச்சரிக்கை

dr maஜோகூர்  பாருவின்  விரைவான  வளர்ச்சியைப்  பார்க்கையில்,  மலாய்  தேசியத்தின்  கோட்டையான  அது  மலாய்க்காரர்  கையை  விட்டுப்  போய்விடுமோ  என்ற  கவலை  மேலிடுவதாக  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  எச்சரித்துள்ளார்.

ஜோகூர்  பாருவில்  வானளாவும்  கட்டிடங்கள்  நிரம்பி  வருவதைக்  குறிப்பிட்டு  அது  “ஜோகூர்  பாரு  பாரு”-வாக  மாறி  வருகிறது என்றவர்  தம்  வலைப்பதிவில்  கூறி  இருக்கிறார்.

விண்ணைத்  தொடும்  அக்கட்டிடங்களில்  குடியிருக்கப்  போகின்றவர்கள்  யார்,  வேலை  செய்யப்  போகின்றவர்கள்  யார்  என்றவர்  வினவினார்.

“அவர்கள்  ஜோகூர்  பாருவைச்  சேர்ந்த  அல்லது  அதைச்  சுற்றி  வாழும்  மலாய்க்காரர்களாக  இருப்பார்களா?  அப்படி  இருக்க  மாட்டார்கள்  என்பதுதான்  கவலையளிக்கிறது”, என்று  மகாதிர்  கூறினார்.

ஜோகூர்  பாருவின்  இன்றைய  நிலை,  1819-இல் சிங்கப்பூர்  60ஆயிரம்  ஸ்பானிஷ்  டாலருக்கு  பிரிட்டிஷாருக்கு  விற்கப்பட்ட  நிலையைப்  போன்றிருக்கிறது  என்றாரவர்.

“வெளிநாட்டவர் வெள்ளமென  சிங்கப்பூருக்குள்  திரண்டு  வந்தனர். அங்கு  ஒரு  மாநகரம்  உருவாக  அதில்  ஆதியில்  குடியிருந்தவர்கள்  முழ்கி மறைந்து  விட்டனர்.

“அதன்பின்  சிங்கப்பூர்,  ஜோகூருக்குத்  திருப்பிக்  கொடுக்கப்படவில்லை.

“இப்போது  ஆடம்பரமாக  உருவாகிவரும்  இந்த  அழகு  நகரமும்  இன்னொரு  சிங்கப்பூராக  மாறி  விடுமா?”, என்று  மகாதிர்  கேள்வி  எழுப்பினார்.