பினாங்கு அரசு, ஜனவரியிலிருந்து போலீஸ் காவலில் எழுவர் இறந்துபோனதைத் தொடர்ந்து அவ்வாறு நேரும் மரணங்களை ஆராய ஒரு பணிக்குழுவை அமைக்கிறது.
அக்குழுவுக்கு மாநில துணை முதலமைச்சர் II பி.இராமசாமி தலைமை வகிப்பார் எனவும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களான ஜகதீப் சிங் டியோவும் டாக்டர் அரிப் பஹார்டினும் அதன் உறுப்பினர்கள் எனவும் தெரிகிறது.
இராமசாமியைத் தொடர்புகொண்டபோது அப்பணிக்குழு விரைவில் அமையும் என்றார்.
“இவ்விவகாரம் தொடர்பில் போலீசுக்கும் சட்டத்துறைத் தலைவருக்கும் எழுதிய பல கடிதங்களுக்குப் பதில் இல்லை என்பதால் இக்குழுவை அமைக்கிறோம்”, என இராமசாமி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“திங்கள்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இது பற்றி விளக்கப்படும்”, என்றாரவர்.
தொடரட்டும் உங்கள் மக்கள் சேவை…
இப்பதான் பணிக்குழு ஆரம்பித்திருக்காங்க, இவ்வளவு நாளா இத ஏன் செய்யல, இப்ப தான் அறிவு வந்திருக்கா?
சில அறிவற்ற கோமாளிகள் இப்பதான் தெளிவாகி இருக்குங்க போல.பேராசிரியர் இராமசாமியியை கேள்வி எழுப்பவும் அவரது திட்டத்தை குறையும் சொல்லும் கோமாளியே….ம.இ.கா காரனுங்க போடும் எழும்பு துண்டுக்கு வால் ஆட்டியதை நிறுத்து.யார் இந்த கோமாளி இராமசாமி?இவன் ம.இ.காவின் கைகூலி!!!!