சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமின் பதவிக்காலம் முடியும்வரை அவரை ஒன்றும் செய்யக்கூடாது.
காலிட்டின் ஆதரவாளர் ஒருவர் இப்படிச் சொல்லி இருந்தால் வியப்பில்லை. ஆனால், சொன்னவர் அம்னோ செராஸ் தொகுதித் தலைவர் சைட் அலி சைட் அல்ஹப்ஷி.
காலிட்டைத் தேர்ந்தெடுத்தவர்கள் மக்கள் என்பதால் அவரைப் பதவியிலிருந்து அகற்றும் முயற்சி மக்களின் தேர்வைப் புறக்கணிப்பதாக அமையும் எனவே, அப்படிப்பட்ட முயற்சிகளை நிறுத்த வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
“அது மக்களுக்கு அவரின் நிர்வாகம்மீது நம்பிக்கை இருப்பதைக் காண்பிக்கிறது. எனவே, அவரது பணியைச் செய்துமுடிக்க அனுமதிப்பதே நல்லது”, என்றாரவர்.
இரும்பு அடிக்கும் ஆலையில் ஈக்கு என்ன வேலை??? கட்சி பூசல் என்பது சகஜமே. மக்களுக்கு எது நல்லது என்ன தேவை என்பதை பக்காத்தான் ராக்யாட் நன்றாகவே அறிந்துள்ளது. பாரிசானை குறிப்பாக அம்னோவைப் போல் அல்ல.!!!!
காலிட்டை மந்திரி பெசராக தேர்ந்தெடுத்தது மக்கள் அல்ல, அவர்களை பிரதிநிதிக்கும் மக்கள் கூட்டணியின் சட்டமன்ற பிரதிநிதிகளே. அவர்களுக்கே அந்த உரிமை உள்ளது. அம்னோவுக்கு அல்ல. கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க சிலாங்கூர் அம்னோ தூண்டில் போடுவதாக தெரிகின்றது. ஒரு மீன் கூட அகப்படாது போலிருக்கு. வேண்டுமானால் மில்லியன் வகை இரையை போட்டுப் பாரும். பணபசியில் அங்கலாய்ப்பு புடிச்ச மீன் ஏதாவது சிக்கனாலும், சிக்கலாம்.
எங்கேயோ கோளாறு நடக்குது, ஒரு வேலை அன்வாரின் மனைவி வான் அஸிஸா அடுத்த சிலாங்கூர் முதல்வராக ஆக்க ஏதாவது மறைமுக ஏற்பாடுகள் நடக்கிறதோ?