அமைச்சர்கள் மகாதிரைப்போல் ‘நடக்க’ வேண்டும்

kadir aடாக்டர்  மகாதிர்  முகம்மட்  பிரதமராக  இருந்தபோது   கால்நடையாக சென்று  நாட்டு  நிலவரங்களை  நேரில்  கண்டறிந்ததுபோல்  இப்போதுள்ள  அமைச்சர்களும்  செய்ய  வேண்டும்  என்று  மூத்த  செய்தியாளர்  ஏ.காடிர்  ஜாசின்  கேட்டுக்கொண்டிருக்கிறார்.

நடப்பது  உடல்நலனுக்கு  நல்லது  என்பதுடன்  அமைச்சர்கள்  மக்களை  நன்கு  அறிந்துகொள்ளவும்  அது  உதவும்.

“அமைச்சர்கள்  ஆடம்பர  அலுவலகங்களில்  இருக்கும்  நேரத்தைக்  குறைத்துக்கொண்டு  மக்களுடன்  கலந்துறவாட  கூடுதல்  நேரத்தை ஒதுக்குவார்களானால்  சாதாரண  மக்களின்  வாழ்க்கை  பற்றி  அவர்களால்  அதிகம்  அறிந்துகொள்ள  முடியும்”, என  காடிர்  தம்  வலைப்பதிவில்  பதிவிட்டிருந்தார்.

கூட்டரசு  பிரதேச  அமைச்சு,  உணவுதானம்  செய்யும்  திட்டங்களுக்குத்  தடை  விதித்திருப்பது  பற்றிக்  கருத்துரைத்தபோது  அவர் இவ்வாறு  கூறினார்.