புத்ராஜெயா ஷரியா உயர்நீதிமன்றத்தில் தமக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை நீக்குவதற்கான நீதிமன்ற மறுஆய்வு மனுவை தாக்கல் செய்வதற்கு அனுமதி கோரி கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் அறிஞர் காசிம் அஹமட் தாக்கல் செய்திருந்த மனுவுக்கு சட்டத்துறை அலுவலகம் இன்று ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
இந்த மனுவை செவிமடுக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு கிடையாது என்று மூத்த அரசு தரப்பு வழக்குரைஞர் சுஸானா அதான் அவரது தொடக்க ஆட்சேபத்தை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, நீதிபதி ஸபாரியா யுசோப் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டா என்பதை எதிர்வரும் திங்கள்கிழமை தீர்மானிப்பார்.
நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு என்று அவர் தீர்மானித்தால், நீதிமன்ற மறுஆய்வுக்கான மனு தாக்கல் செய்ய அனுமதி கோரும் மனுவை அவர் செவிமடுப்பார்.