வீடற்றோர் நிலையைக் கண்டறிய வீதி உலா வந்தார் நஜிப்

pmதலைநகரில்  ஆறு  மாதங்களில்   வீடற்றிருப்போரும்  பிச்சைக்காரர்களும்  தங்குவதற்கு  வசதியாக  ஒரு  இடம்  தயாராகி  விடும்  என்று  நஜிப்  அப்துல்  ரசாக்  கூறினார்.

அதில்  படுப்பதற்கும்  குளிப்பதற்கும்  அவர்களின்  பொருள்களை  வைத்துக்கொள்வதற்குமான  வசதிகள்  இருக்கும்.

“அவர்களுக்கு  அடுக்குமாடி  வீடு  தேவையில்லை. இரவில்  படுப்பதற்கு  ஓர்  இடம் தேவை”, என்றாரவர்.

பிரதமர்,  நேற்றிரவு  ஜாலான்  துன்  பேராக்கில்  பிச்சைக்காரர்களுக்கு  உணவளிக்கும்  ஓர்  இடத்துக்குச்  சென்று  பார்வையிட்ட  பின்னர்  செய்தியாளர்களிடம்  பேசினார்.

பிச்சைக்காரர்களுக்கு  உணவளிப்பதுடன்  அவர்களுக்குத்  தேவையான  மருத்துவ  உதவிகளையும்  வழங்கும்  தன்னார்வலர்களைப்  பிரதமர் பாராட்டினார்.