காலஞ்சென்ற பி.பாலசுப்ரமணியத்தின் மனைவியும் அவரின் பிள்ளைகளும் தொடுத்துள்ள வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்போவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கையும் அவரின் துணைவியார் ரோஸ்மா மன்சூரையும் பிரதிநிதிக்கும் வழக்குரைஞர்கள் கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தனர்.
நஜிப்பின் இளவல்கள் இருவரின் வழக்குரைஞர்களும் அதேபோன்ற மனுவைத் தாக்கல் செய்யப்போவதாகக் கூறியுள்ளனர்.
பாலசுப்ரமணியத்தின் துணைவியாரும் அவரின் பிள்ளைகளும், பாலா அவரின் சத்திய பிரமாணத்தை மீட்டுக்கொண்டதன் விளைவாக நாடு கடந்து இந்தியாவில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டதற்கு ரிம1 மில்லியனுக்குமேல் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடுத்துள்ளனர்.
அரசாங்கம் நீதி துறை எல்லாம் அவர் கைகளில் உங்கள் NEETHI வெல்வது என்பது சத்தியபடது எல்லாம் இறைவனிடம் விட்டு விடுங்கள்
இம்மாதிரியான வழக்குகள் தொடுக்கப்படவில்லையெனில், ஒருசில அரசியல் தலைவர்கள் செய்யும் அட்டூழியங்கள் மக்களுக்கு தெரியாமலேயே அப்படியே மூடி மறைத்து விடுவார்கள்… வெற்றியோ தோல்வியோ, மக்களுக்கு வந்து சேர வேண்டிய செய்திகள் நிச்சயமாக வந்தே சேரும்.