பிரேசிலுக்கு எதிரான ஆட்டத்தில் ஜெர்மனியின் வெற்றியை பங் மொக்தார் ரடின் பாராட்டியது தவறல்ல; ஆனால், ஹிட்லர் வாழ்க என்று சேர்த்திருந்ததுதான் தப்பு எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் குறை கூறினார்.
“பங்கின் கருத்து ஏற்கத்தக்கதல்ல. அதை அவர் மீட்டுக்கொள்வார்”, என்றாரவர்.
பங், நேற்று “Well done… bravo… long live Hitler” என டிவிட் டரில் ஜெர்மனியின் வெற்றியைப் பாராட்டினார்.
இது பலராலும் குறைகூறப்பட்டது.
இன்று நண்பகல் வாக்கில், இன்னொரு டிவிட் செய்திருந்த அவர், “ஜெர்மனி பிரேசிலைப் பிளந்துகட்டியதைப் பாராட்டியபோது என்னை அறியாமல் ஜெர்மன் மக்களைப் புண்படுத்தும் ஒன்றையும் சேர்த்துச் சொல்லிவிட்டேன். அதற்காக மன்னிக்க வேண்டுகிறேன்”, என்று குறிப்பிட்டவர் மற்றொரு குறும்பையும் செய்திருந்தார். “LONG LIVE BUNG,”என்ற தொடரையும் சேர்த்திருந்தார்.
சர்ச்சையும் கிண்டலும் பங்-குடன் கூடப் பிறந்தவை போலும்.
அடே மடயனுங்க்களே எண்டா நடிக்கீரீங்க BUNG ஒரு கேவலமான s….ks MI….GAM இவனுக்கு எதை பார்த்தாலும் போடற ஞாபகம்தான் வருமாம் இன்னொருவனுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு….ய போட்டால்தான் தூக்கமே வருமாம்