அம்பிகாவின் ‘நெகராகூ’ பழைய பல்லவிதான்: இஸ்மா தாக்கு

neg kuநெகராகூ  என்ஜிஓ  அமைந்து  ஒரு  நாள்தான்  ஆகிறது.  அதற்குள்  இஸ்மா (ஈக்காத்தான்  முஸ்லிமின்  மலேசியா) அதைச்  சாடத் தொடங்கிவிட்டது. அந்த  என்ஜிஓ இஸ்லாத்துக்கும்  மலாய்க்காரர்  உரிமைக்கும்  நேரடி  மிரட்டலாம்.

இஸ்மா,  மலேசிய  வழக்குரைஞர்  மன்றத்தின்  முன்னாள்  தலைவர்  அம்பிகா  ஸ்ரீநிவாசனின்  நிழற்படத்தை  அதன்  வலைத்தளத்தில்  வெளியிட்டு  அவரை   ஏமாற்றுக்காரர்  என  வருணித்திருந்தது.

அதில்  நெகராகூ  பற்றிக்  கருத்துச்  சொன்ன  அதன்  தலைவர்  அப்துல்லா  ஷேக்  ரஹ்மான், “என்ன  வேண்டுமானாலும்  பெயரிட்டு  அழையுங்கள். நீங்கள்  யார்  என்பதும்  யாருக்காக  வேலை  செய்கிறீர்கள்  என்பதும்  எங்களுக்குத்  தெரியும்”, எனக்  குறிப்பிட்டிருந்தார்.