பிரதமர்துறையில் உள்ள சில இலாகாக்கள் ஒரே மாதிரியான பணியில் ஈடுபட்டிருப்பதால் ஒன்றுகொன்று போட்டிபோட்டுக்கொண்டு ஒன்றை மற்றொன்றை “அடித்துச் சாப்பிடப் பார்க்கின்றது” என குளுவாங் எம்பி லியு சின் தொங் கூறினார்.
பொருளாதாரத் திட்டப் பிரிவு (இபியு) ஒன்றிருக்கிறது. அடைவுநிலை மேலாண்மை, சேவைப் பிரிவு ஒன்றிருக்கிறது. இந்த இரண்டின் பணியுமே பொருளாதாரத் திட்டங்களை வரைவதும் பெரும் திட்டங்களைத் திட்டமிடுவதும்தான்.
இன்னோர் எட்டுத்துக்காட்டு, பொது- தனியார் பங்காளித்துவப் பிரிவு (யுகாஸ்) தனியார்மயத் திட்டங்களைக் கவனித்துக் கொள்கிறது ஆனால், இதே பணியைத்தான் இபியு-வும் செய்கிறது என லியு கூறினார்.
“அமைச்சரவை மாற்றம்: புதிய அமைச்சர்கள் செம்மையாக சேவையாற்றுவார்களா?” என்ற தலைப்பில் நேற்றிரவு நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசியபோது லியு இவ்வாறு கூறினார்.
37 அமைச்சுகளில் 10 பிரதமர்துறையின்கீழ் உள்ளன என்பதால் பிரதமர்துறையிடம் அதிகாரம் குவிந்து கிடக்கிறது
என்றும் அவர் சொன்னார்.