இஸ்மா, பெர்காசாவைவிட ஆபத்தானது: பாஸ் தலைவர்

yusofமலாய்  மேலாதிக்கத்துக்காக  போராடும்  பெர்காசாவைவிட  ஈக்காத்தான்  முஸ்லிமின்  மலேசியா (இஸ்மா)  அமைப்பு  “ஆபத்தானது,  இனவாதம் மிக்கது”  என்கிறார்  பாரிட்  புந்தார்  எம்பி  முஜாஹிட்  யூசுப்  ராவா.

பாஸ்  கட்சியின்  தேசிய  ஒற்றுமை  பிரிவுத்  தலைவருமான  அவர், “அவர்கள்  சமயப்  போர்வை  போர்த்திய  இனவாதிகள்” என்றார்.

“பெர்காசாவைவிடவும்  இனவாதம்  மிக்கது  இஸ்மா”, என  முஜாஹிட்  கூறினார்.

இஸ்மா  இஸ்லாத்தைப்  பற்றி  “எதிர்மறையான”  பிம்பத்தை  உருவாக்கி  வருவதாகக் கூறி  அவர்  வருத்தப்பட்டார்.

“இஸ்லாம்  நல்லிணக்கத்தை  வலியுறுத்துகிறது.  ஆனால், சமயத்தை  இனவாதத்துக்குப்  பயன்படுத்துவது  ஆபத்தானது”.

முஜாஹிட்,  மலேசியாகினிக்கு  அளித்த  நேர்காணலின்போது  இவ்வாறு  கூறினார்.