முறையீட்டை விசாரிக்க அவசரம் காட்டப்படுவதாக அன்வாரின் வழக்குரைஞர்கள் புகார்

caseகுதப்புணர்ச்சி II  வழக்குமீதான  முறையீடுகளை  விசாரித்து  முடிக்க  கூட்டரசு  நீதிமன்றம்  அவசரம்  காட்டுவதாக  அன்வார்  இப்ராகிமின்  வழக்குரைஞர்கள்  குறைகூறியுள்ளனர்.

நீதிமன்ற  துணை  பதிவதிகாரி  ஹஸ்பி  ஹசான்  மூன்று முறையீடுகளையும்  ஒன்றாக  விசாரிப்பதற்கு  ஏற்பாடு  செய்திருப்பதாக   பாடாங்  செராய்  எம்பி  என்.சுரேந்திரன்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

“அரசுதரப்பு  வழக்குரைஞர்  குழுவிலிருந்து  முகம்மட்  ஷாபி  அப்துல்லாவை  நீக்க  வேண்டும்  என்ற  அன்வாரின்  முறையீடு,  குதப்புணர்ச்சி  வழக்குத்  தீர்ப்புக்கு  எதிரான  அன்வாரின்  முறையீடு, (ஐந்தாண்டுச் சிறை) தண்டனையைக்  கூட்ட  வேண்டுமென்ற  அரசுதரப்பு  முறையீடு  ஆகியவையே  அம்மூன்று  முறையீடுகளுமாகும்”, என்றாரவர்.

எல்லா  முறையீடுகளையும்  ஒரே  நேரத்தில்  விசாரிப்பது  சரியல்ல  என்றவர்  சொன்னார்.