மலேசிய அடையாள அட்டை(மைகாட்) இல்லாதிருக்கும் இந்தியர்கள், இந்தியர் சமூகம் மீதான சிறப்பு அமலாக்கப் பணிக்குழு (எஸ்ஐடிஎப்)வில் தங்களைப் பதிந்துகொள்ள வேண்டும் என அக்குழுத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கேட்டுக்கொண்டுள்ளார்.
1957-க்கு முன்னதாக மலேசியா வந்தவர்களும் 1957-க்குப் பிறகு மலேசியாவில் பிறந்தவர்களும் மைகாட் இல்லாதிருப்பதற்குக் காரணம் ஏதுமில்லை என மஇகா துணைத் தலைவருமான சுப்ரமணியம் கூறினார்.
மலேசியாவில் பல இந்தியர்கள் நாடற்றவர்களாக உள்ளனர் அல்லது சிவப்பு அடையாள அட்டை வைத்திருக்கிறார்கள்”, என்றாரவர்.
இதற்கு முன் ம.இ.கா பணிக்குழுவில் மை கார்டில் பதிந்தவர்களுக்கு எத்தனை பேருக்கு மை கார்டை வாங்கி
கொடுத்தீர்கள் ,விளம்பரம் ஒன்றில் என் மக்கள் நம்பி நம்பி
மோசம் போவதுதான் விதியா , என்று என்று தீரும் என் மக்களின் மை கார்ட் பிரச்னை ,என்று தணியும் எங்களை
அலைகழிக்கும் சோதனை நைனா டாக்டர் .
என்னையா வேடிக்கை!. எத்துனை தடவைதான் பதிவு நடவடிக்கை நடத்துவீர்கள்?. எம்மை அலுவல் காரணமாக காண வந்த ஒரு பாகிஸ்தானியர் சொன்னது. முதலில் அவர் பெட்ரோனாஸ் நிறுவனத்தில் வேலை செய்ய சபா வந்தாராம். பின்னர் ஏறக்குறைய RM5,000/= கொடுத்ததன் வாயிலாக இந்நாட்டு நீல நிற அடையாளக் கார்டு கிடைத்ததாம். பின்னர் அவரின் அண்ணனையும் அவ்வாறே சபாவுக்கு வரவழைத்து நீல நிற அடையாளக் கார்டு எடுத்துக் கொடுத்தாராம்!. இன்று அவர்தம் அண்ணனின் குடும்பத்தினர் அனைவருமே மலேசியா பிரஜைகளாம்!. மலேசிய மண்ணில் பல காலம் வாழ்ந்த இன்னொரு இந்திய நண்பரின் பாட்டி இன்னும் சிகப்பு நிற அட்டையைதான் வைத்துள்ளார். எத்துனை முறை விண்ணப்பம் போட்டும் எல்லாம் தோல்வியில்தான் முடிந்தது!. இதற்குத் தேவை, அரசியல் முடிவு, சட்ட முடிவு அல்ல. சட்டத்தைப் பின்பற்றியவனுக்கு கிடைத்தது சிகப்பு அட்டை அடையாளக் கார்டு. கொல்லைப்புறமாக வந்தவனுக்கு நீல நிற அடையாளக் கார்டு. இது நடப்பதும் ஒரு பணநாயக நாட்டில்தான். இல்லை, இல்லை ஜனநாயக நாட்டில்தான் நடந்தது.
கடந்த 2012 ஆம் ஆண்டு MY DAFTAR இயக்கத்தின் கில் பதிவு செய்தவர்களுக்கு இதுவரை அடையாள அட்டை கொடுக்காமல் naadaka ம்னடத்தி வருகின்றனர்.இந்த டாக்டர் சுப்ரமணியம் ஒரு எமாட்ட்று பேர்வழி .இதுவரையில் பதிந்தவர்களுக்கு ஒன்னும் செய்ய வில்லை ithil புதியவர்கள் பதிவு செய்யுங்கள் என்று வெற்று அறிக்கை விட்டு விளம்பரம் தேடும் அரசியல் மோசடி பேர்வழி தன இந்த ம இ கா தலைவரும்.கடந்த முறை பதிந்தவர்களில் பலர் குடியுரிமைக்காக ஏங்கியே செத்து மடிவிட்ட கண்ணீர் கதை இந்த அரசியல் மோசடி பேர்வழிகளுக்கு தெரியுமா ?.25.11.2007 தேதி அன்று நடந்த புரட்சியை pol மிண்டும் ஒரு முறை இந்த ம இ கா ஆயுக்கிங்களுக்கும் தேசிய முன்னணிக்குக் எதிராக நடைபெற வேண்டும்.அதன் பிறகு தன மலேசியா இந்தியர்களுக்கு விடிவு காலம் பிறக்கும்.ம இ கா vaiyo , தேசிய முன்னணியையோ இனியும் நம்பி மோசம் போகவேண்டாம் என்று எனது அருமை உடன்பிறப்புக்களுக்கு அன்பு வேண்டு கொள் விடுக்கிறேன்.
நான் இறப்பதற்குள் இந்நாட்டு குடிமகனாக ஆகவேண்டும் என்று பல வயோதியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர் என்று டாக்டர் சுப்ரமணியம் நேற்றைய வசந்தம் நிகழ்ச்சியில் அறிவித்தார். வயோதிகராகி இறக்கப் போகும் வயதோருக்கு எதற்கையா நீல அடையாள அட்டை?? ஒருகால், வயதானவர்கள் பி என்னுக்கு ஓட்டு போடுவார்கள் என்ற எண்ணமா??? உங்கள் MY DAFTAR)
2012ல்லிருந்து தேய்ந்துபோன ரெக்கோர்ட் மாதிரி இதையே திரும் திரும்ப பாடிக்கொண்டிருக்கிறது!!!
இ .. இ … இ .. இதுதான் அரசியலோ?
நம்மவர்கள் பிறப்பு பத்திரம் / திருமண பதிவு / போன்ற ஆவணங்கள் பெறுவதில் அலச்சியம் காட்டுவதால்தான் இந்த பிரச்சனை .தயவு செய்து உரிய நேரத்தில் இதனை பெற வேண்டும் . மற்றவர்களை குறை சொல்லுவதைவிட நமது வேலைகளை நாம் கவனிக்கவேண்டும் என்பது எனது வேண்டுகோள் . காலம் கடந்து செய்வதினால் இந்த நிலைக்கு தள்ளபடுகிறோம் .தவறாக இருந்தால் மன்னிக்கவும் .
முடிந்த பொது தேர்தலுக்கு மின்னல் fm மில், காஜாங்கில் இவருக்கு அடையாள அட்டை கொடுத்தோம்,ஜோகூரில் இவருக்கு அடையாள அட்டை கொடுத்தோம் என்று மீண்டும் மீண்டும் ஒலிபரப்பு செய்து தமிழனை, இந்தியனை மண்டை சலவை செய்தது இந்த அரசு ! மீண்டும் ஒரு முறை பணிக்குலுவாக அவதாரம் எடுத்துவிட்டதா என்ற கேள்வி எழாமல் இல்லை ! நல்லதே நடக்கட்டும் !
ம் .இ.கா இந்தியர்களுக்கு ஒண்ணுமே செய்யவில்லை என்று எதிர்கட்சிகள் வருகிற 14வது பொது தேர்தலில் பிரசாரம் செய்ய கூடும் அதனால் மீண்டும் மைகர்ட் பதிவு நாடகம் .ஆனால் சும்மா சொல்லகூடாது வயதான கிழவன் ,கிழவிகளுக்கு மை கார்டை கொடுத்துவிட்டு நாங்கள் 30,000பெருக்கு கொடுத்துள்ளோம் என்று நாளை அறிக்கைவரும் இருப்பினும் இன்னமும் வாலிபர்கள் மைகார்ட் இல்லாமல் சிவப்பு அடையாளத்தை வைத்துகொண்டு சிவப்பு மனிதர்களாக வறுமையில்
வாடுகிறார்கள் . டத்தோ ஸ்ரீ சுப்பிரமணியம் மேடையில்
வாய்கிழிய பேசும் நீங்கள் உங்கள் ம.இ.கா வை அடுத்த
பொது தேர்தலில் காப்பாற்றுங்கள் முடியுமா நைனா .
தமிழ் பள்ளி , அடையாலக்கார்டு , இடுகாடு , பிரச்னை , புறம்போக்கு நிலம் , கோவில் உடைப்பு போன்ற பிரச்னைகள் இருப்பதனால் தான் ம ஈ கா என்ற கட்சி இன்னும் பாரிசானில் குப்பை கொட்டிவருகிறது ! பிரசனைகளை தீர்ந்துவிட்டால் அங்கு வேலை இல்லாமல் போய்விடும் ,பிறகு எப்படி பிஜே கே , பி பி என் , கே எஸ் எம் , டாதோ பட்டம் கிடைக்கும் …. கொஞ்சம் சிந்தித்துபார்கவும் ….. இது எல்லாம் ஒரு அரசியல் கட்சி யாம் …….
அப்படியானால் போகாதீர் அன்வர் ஜெயித்த பின் வாங்கிகொள்ளலாம் மை காட்,நாராயண நாராயண.