பயங்கரவாதிகளுக்கும் கடத்தல்காரர்களுக்கும் புகலிடமா சாபா?

kittinசாபா, கடத்தல்கார்களுக்கும்  பயங்கரவாதிகளுக்கும்  பாதுகாப்பளிக்கும்  புகலிடமாக  மாறியுள்ளாதா  எனக் கேள்வி  எழுப்புகிறார்  சாபா  ஸ்டார்  கட்சித் தலைவரும்  பிங்கோர்  சட்டமன்ற  உறுப்பினருமான  ஜெப்ரி  கிட்டிங்கான்.

எல்லைப்பகுதியில்  கட்டுப்பாடு  இல்லாதிருப்பதாலும்  மலேசிய  அடையாள  அட்டைகள்  அள்ளிக்கொடுக்கப்பட்டிருப்பதாலும் சாபாவின்  பாதுகாப்பு  மோசமடைந்துள்ளது.

இதனால்  சாபா  “பயங்கரவாதிகளுக்கும்,  தீவிரவாதிகளுக்கும், கடத்தல்காரர்களுக்கும்  புகலிடமாக”  மாறியுள்ளது  என  கிட்டிங்கான்  கூறினார்.

சனிக்கிழமை  சம்பவம், நான்கு  மாதங்களில்  நிகழ்ந்த  ஐந்தாவது  சம்பவமாகும்  என்று  குறிப்பிட்ட  அவர்,  “சாபாவின்  பாதுகாப்பு  என்னவானது? கிழக்கு  சாபா  பாதுகாப்புத்  தளபத்தியம் (எஸ்கோம்)  அமைக்கப்பட்ட  பின்னர்  சாபாவில்  பாதுகாப்பு  நிலவரம் மேலும்  மோசமடைந்து விட்டதுபோலத்  தோன்றுகிறது”, என்றார்.