சனிக்கிழமை நடந்த சந்திப்பின்போது சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமைத் தன்னுடன் சேர்ந்துகொள்ளுமாறு அழைத்ததாகக் கூறப்படுவதை பாஸ் மறுக்கிறது.
நோன்பு மாதம் என்பதால் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கும் தாமும் மந்திரி புசாரைப் பார்க்கப்போனதாக அக்கட்சியின் தலைமைச் செயலாளர் முஸ்தபா அலி கூறினார்.
“நோன்பு மாதம் அதுதான் சென்றேன். காலிட்டும் ‘தோக் குரு(ஹாடி)’வை நீண்ட காலமாக சந்திக்கவில்லை.
“நாங்கள் (காலிட் பாஸில் சேர்வது பற்றி) பேசுவதாக இருந்தால் அதற்கு நீண்ட நேரம் தேவைப்படும். நாங்களோ தராவிக் தொழுகைக்குப் பின்னர் இரவு 11 மணிக்குத்தான் அவரைச் சந்தித்தோம்”, என்றவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அம்மூவரும் அமர்ந்து பேசுவதைக் காண்பிக்கும் படமொன்று சமூக வலைத்தளங்களில் இடம்பெற்றிருப்பதை அடுத்து காலிட் பாஸில் சேரப் போகிறார் என்ற வதந்தி உலா வந்து கொண்டிருக்கிறது.
அம்னோவில் சேரப் போகிறார் என்றால் கொஞ்சம் பொருத்தமாக இருக்கும்!
இவன் ஒரு LALANG மிகவும் கவனம் !!!