கம்பள வியாபாரி தீபக் ஜெய்கிஷன் பேங்க் ரக்யாட்டுக்குக் கொடுக்க வேண்டிய கடன் எல்லாரும் நினைப்பதுபோல் ரிம32 மில்லியன் அல்ல, அவருக்கு மேலும் இரு கடன்கள் உள்ளன, அவற்றையும் சேர்த்தால் மொத்த கடன் ரிம215 மில்லியனைத் தாண்டும்.
இவ்வாறு தெரிவித்த பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் மாபுஸ் ஒமார், மூன்று கடன்களையுமே தீபக் செலுத்தத் தவறிவிட்டார் என்றார். இப்போது கடன்களைத் தீர்ப்பதற்கு ஓர் ஒப்பந்தம் காணப்பட்டிருக்கிறதாம்.
“அவ்வங்கி தீபக்குக்குச் சிறப்புச் சலுகை காட்டுவது ஏன்?”, என்றவர் கேள்வி எழுப்பினார்.
அரசியல்வாதியுடன் கூட்டு சேர்ந்து மக்கள் பணத்தை கொள்ளை அடித்தால் பதில் சொல்லியே ஆகவேண்டும் !
வட்டி இல்லாக் கடன். முன்னைய திகதி காசோலை.. இதில் எத்தனை காசோலைகள் ரொக்கமாக மாற்றப்பட்டு கணக்கில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது??? ஈட்டி எட்டிய வரைதான் பாயும். ஆனால், பணமோ பாதாளம் வரை … ஏன் மரணலோகம் வரைகூட பாயும்….!!!! புரிந்தால் நல்லது….
அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கு எல்லாமே சாத்தியம்!