மகாதிர் நஜிப்பைக் குறைகூறுவது தவறு என்கிறார் அம்னோ எம்பி

tppaபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  ஒரு  வலுவான  தலைவர்  அல்லர்  என்று  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  குறிப்பிட்டிருப்பதை அம்னோ  எம்பி  நவாவி  அஹ்மட்  மறுக்கிறார்.

நஜிப், வலுவான  தலைவராக  இருந்தால்  பசிபிக் வட்டார  பங்காளித்துவ  ஒப்பந்தத்தை (டிபிபிஏ) நிராகரித்திருப்பார்  என்றும்  அந்நிய  நெருக்குதலுக்கு  வளைந்து  கொடுத்திருக்க  மாட்டார்  என்றும்  மகாதிர்  கூறி  இருந்தார்.

அவ்வாறு கூறுவது  தப்பு  என்று  சொன்ன  நவாவி, அமெரிக்க  அதிபர்  பராக் ஒபாமா  ஏப்ரலில்  மலேசியா  வந்தபோது  நஜிப்  ஒன்றும்  அவரின்  நெருக்குதலுக்கு  அடிபணியவில்லை  என்றார்.

“நஜிப்  நிபந்தனைகளுடன்தான்  டிபிபிஏ-யை  ஏற்க  முடியும்  என்றார்.

“ஒபாமா  நெருக்குதல்  கொடுக்க  வந்தாலும்  நஜிப்  நாட்டின்  நலனை   விட்டுக்கொடுக்கத்  தயராக  இல்லை”, என்றார்.