தனியார்துறையில் உற்பத்தி திறணை அதிகரிக்கும் பொருட்டு வாரத்தில் ஐந்து-நாள் வேலை முறையை கட்டாயமாக்குமாறு மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் அரசாங்கத்தை வேண்டிக்கொண்டுள்ளது.
அவ்வாறு செய்வது அரசாங்க இலாகாவின் வேலை நாட்களுடன் சுமுகமான நடைமுறைகளைப் பின்பற்ற உதவியாக இருக்கும் அந்த அமைப்பின் துணைத் தலைமைச் செயலாளர் எ.பாலசுப்ரமணியம் பெர்னாமாவிடம் கூறினார்.
உண்மைதான் , சனிக்கிழமை காலை வேளை வாகன நெரிசலில் மாட்டிக்கொண்டு , மீண்டும் 1.30 மதியம் வாகன நெரிசலில் மாட்டிக்கொள்வது சரியான வேலை சிந்தனையா என்ற கேள்வி எனக்கும் உண்டு !
900 வெள்ளி அடிப்படி சம்பளம் வந்தவுடன் முதலாளிகள் 12 மணி நேரம் வாரத்தில் 6 நாட்களும் வேலை செய்ய சொல்லி உத்தரவு போட்டனர் .(சில தொழில்சாலைகளை தவிர ) இனி வரும் காலங்களில் 15-16 மணி நேரம் வேலை செய்ய செய்ய சொன்னாலும் ஆச்சரிய பட ஒன்னும் இல்லை , மாதம் மாதம் விலை வாசி உயர்வது பலருக்கும் புரிவதில்லை, ,கண்டுகொள்வதும் இல்லை . i