‘யூதர்கள் தயாரிக்கும் சிகரெட்டுகளைப் புகைப்பவர்கள் இஸ்ரேலுக்கு உதவுகிறார்கள்’

cigயூதர்  நிறுவனங்கள்  தயாரிக்கும்  சிகரெட்டுகளைப்  புகைக்கும்  முஸ்லிம்கள்  பாலஸ்தீன  மக்கள்  கொல்லப்படுவதற்கு  உடந்தையாக  இருக்கிறார்கள்  என  பினாங்கு  பயனீட்டாளர்  பாதுகாப்புச்  சங்கம்  கூறுகிறது.

அதன்  தலைவர்  கொரிஸ்  அடான்,  அந் நிறுவனங்கள்,  அவற்றின்  ஆதாயத்தில்  10 விழுக்காட்டை  இஸ்ரேலுக்குக்  கொடுத்து  அதன்  முஸ்லிம்  அண்டை  நாடுகளுடன் போரிட  உதவுகின்றன  என்றார்.

“யூதர்கள்  தயாரிக்கும்  அதைப் புறக்கணியுங்கள்,  இதைப் புறக்கணியுங்கள்  என்று  மற்றவர்களைக்  கேட்டுக்கொள்வதைவிட  நீங்களே  அதைச்  செய்யலாமே. யூதர்களுக்குச்  சொந்தமான  நிறுவனங்களின்  சிகரெட்டுகளைப்  புறக்கணிப்பதன்வழி  அதைத்  தொடங்கலாமே”, என பாலஸ்தீனம்  மீதான இஸ்ரேலிய  தாக்குதலைக்  கண்டனம்  செய்யும்  முஸ்லிம்களை  அவர்  கேட்டுக்கொண்டார்.