பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு சிலாங்கூர் அரசின் தலைமைத்துவதில் மாற்றம் செய்யப்படுவதை வரவேற்பதுபோல் தெரிகிறது. தலைமையில் மாற்றங்கள் நிகழ்வது ஒன்றும் புதிதல்லவே என்கிறார் அவர்.
“தலைவர் மாற்றப்பட்டால் என்ன, அது ஒரு பிரச்னையே அல்ல. திரெங்கானுவில் நடக்கவில்லையா. அப்போது ஊடகங்கள் அதைப் பெரிதுபடுத்தவில்லையே”, என நேற்று கப்பாலா பத்தாஸில் பேசுகையில் மாட் சாபு கூறினார்.
ஆனால், அப்துல் காலிட் இப்ராகிமுக்குப் பதிலாக மந்திரி புசாராக யாரை நியமிப்பது என்று பக்காத்தான் ரக்யாட் தலைமைத்துவம் இன்னும் விவாதிக்கவில்லை என்றாரவர்.