சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கும் சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிமுக்கு முன்னாள் அமைச்சர் ஜைட் இப்ராகிம் அறிவுரை ஒன்றை முன்வைத்துள்ளார். என்ன நடந்தாலும், அம்னோவில் மட்டும் சேராதீர்கள் என்பதுதான் அது.
அது காலிட்டின் புகழுக்குக் களங்கமாக அமையும், அவரது எதிர்காலமும் இருண்டுபோகும் என்றவர் எச்சரித்தார்.
“காலிட் அம்னோவில் சேர்ந்தால் அவர் இதுவரை நம்பிவந்த நேர்மை, பொறுப்புடைமை ஆகிய கொள்கைகளைக் கைகழுவி விட்டார் என்றுதான் அர்த்தமாகும்.
“அது போக, அவரது ஆயுள்காலத்தில் அம்னோ சிலாங்கூரை வெல்லப்போவதில்லை என்கிறபோது எதற்கு மெனக்கெட வேண்டும்?”, என ஜைட் தம் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
எல்லாவற்றையும் விட்டு கோல்ப்கூட ஆடலாம். அதைக் கற்றுத்தர தாம் தயார் என்றும் ஜைட் கூறினார்.
மத்திய ஆட்சி அம்னோவுடையது தானே! தொழில் ரீதியில் அவர் பயன் பெறலாம்!
வசதி படைத்த அரசியல் வாதி ஓய்வு கோல்ப் விளையாடுவது ,
சாதாரன ம .இ.க அரசியல் வாதி கட்சியை விட்டு விலகினால்
இருக்கிறது கோயில் தலைவர் பதவி இல்லையென்றால் இடுகாட்டு தலைவர் பதவி ,சைட் உங்களை விட நாங்கள்
மேல் அல்லவா.
நல்லா சொன்னீங்க ஜைட்.