ரபிஸி ரம்லி ஒரு ஆவணத்தைக் காண்பித்து அது, பேங்க் ரக்யாட்டின் நிர்வாகத்தில் உள்நாட்டு வணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் ஹசான் மலேக் தலையிட்டிருப்பதற்கான சான்று எனக் கூறியுள்ளார்.
அந்த வங்கி, கம்பள வியாபாரியான தீபக் ஜெய்கிஷனுக்குச் சிறப்புச் சலுகை காட்ட அதுதான் காரணம் என்றும் பிகேஆர் வியூக இயக்குனர் கூறினார்.
தேசிய கவனக்குறைவு மற்றும் தகவல் அளிப்போர் மையத்தில் (நவ்) 13 ஆவணங்களைக் காண்பித்த ரபிஸி, அவற்றில் வங்கிக்கும் ஹசானுக்குமிடையில் எழுதப்பட்ட கடிதங்களும் வங்கியின் குறிப்பாணைகளும் இருப்பதாக தெரிவித்தார்.
“அந்த ஆவணங்கள் தீபக் மிகப் பெரிய அளவில் கடன்பட்டிருப்பதைக் காண்பிக்கின்றன”, என்று கூறிய பாண்டான் எம்பி, அடுத்துவரும் நாள்களில் மேலும் பல ஆவணங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்போவதாகக் குறிப்பிட்டார்.
மலேசியாகினி ஹசானைத் தொடர்புகொண்டபோது, அவ்விவகாரம் தொடர்பில் விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என்றார்.
ரபிஸி ரம்லி அவர்களே !!! கடன் அல்ல !!! அது ” BU1M ” ; அதாவது
தீபக் ஜெய்கிஷனுக்கு கொடுக்கபட்ட ” BANTUAN UMNO 1 MALAYSIA “
கண்டது கையளவு காணாதது கடல் அளவு.
தீபக் ஜெய்கிஷனுக்கு ஏன் இந்த தனிப்பட்ட சலுகை??? தேசத்துக்காக அப்படியென்ன இவர் பெரும் சேவையை செய்துள்ளார்??? அல்லது ஏதாவது தலைவரின் குடுமி இவர் கையில் மாட்டிக்கொண்டதா???