காலிட் இப்ராகிம் அடுத்த பொதுத் தேர்தல்வரை தாமே சிலாங்கூரின் மந்திரி புசார் என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஆனால், ஹரி ராயாவுக்குப் பின் அவர் இருக்க மாட்டார் என்று ஒரு செய்தி உலா வந்துகொண்டிருக்கிறது.
இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய காலிட், கடந்த பொதுத் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தமக்கு “அவகாசம்” தேவைப்படுவதாகக் கூறினார்.
“அடுத்த பொதுத் தேர்தல்வரை மாநிலத்தை நிர்வகிப்பதாக உறுதிமொழி எடுத்திருக்கிறேன்”, என்றாரவர். ஆனால், அவரின் கட்சிக்குள்ளேயே அவர் விரைவில் பதவி இறங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
விரைவில், சிலாங்கூர் மந்திரி புசார் பதவியில் ஒரு மாற்றம் நிகழலாம். பக்காத்தான் ரக்யாட் தலைமைத்துவம் அதைப் பற்றி விவாதித்து வருவதாக பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியிருப்பது அதைத்தான் கோடிகாட்டுகிறது.
காலிட் அடுத்த பொது தேர்தல் வரை ரொம்ப லேட். முடிந்தால்
ராயவுக்கு பிறகு விலகுங்கள். பெட்டாலிங் ஜெயாவில் அடுக்கு மாடி
வீடுகளில் பல கட்டடங்களில் லிப்டு வேலையே செய்வதில்லை,
மக்கள் அவதி படுகிறார்கள். சிலாங்க்கோரில் எல்லா லிப்டுகளும்
புதிதாக மாற்றுகிறேன் என்று சொல்லிவிட்டு,தேவைஇல்லாமல்
இலவச பஸ்கள் சேவையில் ஈடுபடுத்த என்ன காரணம் ? rapid kl
ஒரு வெள்ளிதானே வாங்குகிறார்கள், இதில் என்ன இலவசம் ?
மக்களின் வரி பணத்தில் இந்தோனேசியா ,நேபால்காரன் எல்லாம்
அனுபவிக்கிறார்கள்,டாக்சி ஓட்டும் மலாய்காரர்கள் ஏசுவது
உங்கள் காதில் விழவில்லையா?
அய்யா காலிட் அவர்களே…அடுத்த பொதுத் தேர்தல் வரை என்ன…அதன் பின்னர் கூட நீங்கள் தான் முதல் மந்திரி..அதற்குத்தான் இப்போதே ஆட்சி மாற்றத்துக்கு அம்னோவுடன் கூட்டு சேர்ந்து, சிலாங்கூரை நாசமாக்கி விட்டீரே..? நீர் முதல் மந்திரியாக பொறுப்பேற்ற இந்த 8 ஆண்டுகளில் எத்தனை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றீர்கள்? பிரதமருக்குக் கூட நேரம் இருக்கிறது ஆனால் உமக்குத்தா இல்லை. உங்களை மட்டும் அல்ல…பக்காதான் பிரதிநிதிகள் அத்தனை பேரையும இந்த கேள்வி கேட்கிறேன்..தயவு செய்து உங்களுக்கு ஓட்டுப் போட்ட மக்களின் அவலங்களைக் காது கொடுத்துக் கேளுங்கள்…
கட்சிக்காக யாரும் ஓட்டுப் போட்டதாக தெரியவில்லை. பி.ஆர் முடிந்தால் சிறந்த எதிர்கட்சியாக செயல்பட முயலுங்கள். (தயவு கூர்ந்து எழுத்துப் பிழைகளைச் சரிபார்த்து உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுங்கள். இனி அதிகமான எழுத்துப் பிழைகளோடு வரும் கருத்துகள் அங்கீகரிக்கப்படாது என்பதை கவனத்தில் கொள்ளவும். ஆ.ர்)
சிலாங்கூர் MB பதவிக்கு அஸ்மின் /வான் இருவருக்கும் தகுதி இல்லை.
(உங்கள் கருத்து திருத்தப்பட்டுள்ளது. ஆ.ர்.)
அன்வார் அவர்களே மெந்தெரி புசார் ஆகலாமே.