காலிட்டின் தலைவிதியை கட்சி நிர்ணயிக்கும்

 

Anwar-Khalidகட்சியின் தலைமைத்துவப் பொறுப்பில் எவரும் “நிரந்தரமாக” இருப்பாரா என்பதை கட்சிதான் முடிவு செய்யும், எந்த தனிப்பட்டவரும் அல்ல என்று பிகேஆர் கட்சியின் நடப்பியல் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று காலிட் இப்ராகிம் தமது மந்திரி புசார் பதவின் இரண்டாவது தவணை முடிவடையும் தொடர்ந்து இருக்கப் போவதாக கூறியிருந்தது பற்றி வினவிய போது கூறினார்.

இத்தகவலை இன்று மந்திரி புசாரின் ஷா அலாம் இல்லத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அன்வார் கூறினார்.

காலிட் இப்ராகிம் அவரது பதவியின் இரண்டாவது தவணை முடியும் வரையில் பதவியில் தொடர்வாரா என்ற கேள்விக்கு அன்வார் நேரடியாக பதில் கூறவில்லை.

“கட்சியோ, மாநில சட்டமன்ற உறுப்பினர்களோ மாற்றம் (தலைமைத்துவத்தில்) வேண்டும் என்று கோருவதற்கு இடமில்லை என்ற தோற்றத்தை அளிக்கும் அறிக்கைகள் எதனையும் வெளியிட வேண்டாம் என்று நான் முன்பே (காலிட்டுக்கு) ஆலோசனை கூறியுள்ளேன்”, என்று அவர் கூறினார்.

காலிட்டின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்க கட்சிக்கு எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதை அன்வார் திட்டவட்டமாக கூறவில்லை.